கிறிஸ்துவுடன் மறைக்கப்பட்ட ஜீவியம் HIDDEN LIFE WITH CHRIST 56-0213 திங்கட்கிழமை மாலை, பிப்ரவரி 13, 1956 Calvary Temple Soul's Harbor, மினியாபோலிஸ், மினசோட்டா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் கிறிஸ்துவுடன் மறைக்கப்பட்ட ஜீவியம் (56-0213) கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், எல்லாம் கூடும், இப்போது நான் விசுவாசிக்கிறேன்; இப்போது, நான் விசுவாசிக்கிறேன், இப்போது, நான் விசுவாசிக்கிறேன், எல்லாம் கூடும், இப்போது, நான் விசுவாசிக்கிறேன். நாம் ஜெபிப்போமா. எங்கள் பரலோகப் பிதாவே, அது ஒரு பாடல் மட்டுமல்ல; அது எங்கள் ஜெபமும்கூட, பிதாவே. இப்போது நாங்கள் விசுவாசிக்கிறோம் என்பதே இன்றிரவு எங்கள் அறிக்கையாக இருக்கும். நாங்கள் வேதாகமத்தின் அறிக்கையை விசுவாசிக்கிறோம்; இயேசு மெய்யாகவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் கன்னி மரியாளினிடத்தில் பிறந்தார், பிலாத்துவின் கீழ் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திற்கு ஏறிச்சென்று, இன்றிரவு எங்கள் அறிக்கைக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்கிறோம். நாங்கள் முழு இருதயத்தோடும் அவரை நேசிக்கிறோம். 2 மேலும் பிதாவே, அவருடைய நாமத்தினாலே நாங்கள் உம்மிடம் எதைக் கேட்டாலும் அது அருளப்படும் என்று சொன்ன அவருடைய வார்த்தையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். முதலாவதாக, இந்த நாள் முழுவதும் நீர் எங்களுக்குக் காண்பித்த தயவிற்காக உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். ஆண்டவரே, இந்த உலகத்திலிருந்து பலர் இன்று உம்மைச் சந்திக்க வந்திருக்கிறார்கள், அநேகர் சமாதானத்தோடும் அநேகர் துயரத்தோடும் வந்திருக்கிறார்கள். பிதாவே, ஒருவேளை நாளையதினம் யாராவது உம்மை அவமானத்தோடு சந்திப்பதற்குச் செல்லவிருப்பவர்கள் இங்கு யாராவது இருந்தால், இன்றிரவு அது மாற்றப்பட்டு, அவர்கள் வந்து தங்கள் தவறுகளை அறிக்கை செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஒருவரும் கெட்டுப்போகாமல், எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்பதே உம்முடைய சித்தமாயிருக்கிறது. ஆராதனையின் அடுத்த பகுதிகளில் எங்களை ஆசீர்வதியும், இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3 இந்த மாலையில் ஆசீர்வதிக்கப்பட்ட பழைய வேதாகமத்தைத் திறந்து வைத்துக்கொண்டு, மறுபடியும் உங்களோடு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; வேதாகமத்தைத் திறந்து, தேவனுடைய வார்த்தையிலிருந்து எனக்குத் தெரிந்த சிறந்த முறையில் போதிப்பதே நம் இருதயத்தின் பொக்கிஷமாக இருக்கிறது. 4 அப்படியே, சகோதரர் ஆலனுக்காக நாம் மீண்டும் ஜெபிக்க வேண்டும் என்று யாரோ என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள், அவர் மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார் என நினைக்கிறேன், மீண்டும் சிறைக்குச் செல்கிறார், அதனால் அவர்கள்... சகோதரர் ஜாக் கோ கடந்த வாரம் மியாமியில் சிறையில் இருந்தார், அதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன், நம்முடைய-நம்முடைய சகோதரர்களோடு ஏராளமான சிறை அனுபவங்களை நாம் சந்திக்கிறோம். எனவே நாம் இங்கு இருக்கும்போது, அந்தச் சகோதரர்களுக்காக ஒரு வார்த்தை ஜெபம் செய்வோம். பரலோகப் பிதாவே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்; திரு. ஆலன் மீதான குற்றச்சாட்டுகள் என்னவென்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். ஆண்டவரே, அது எதுவாக இருந்தாலும், அது அவருடைய தவறாக இருந்தால், அவரை மன்னியும். அது சட்டத்தின்படி என்றால், அவர்களை மன்னியும், பிதாவே. நற்செய்தி எங்கும் முதன்மை பெறட்டும். சகோதரர் கோ-வை ஆசீர்வதியும், ஆண்டவரே, அவருடைய காரியம் என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஒரு குழந்தையின் காலிலிருந்து பிடிமானங்களை (braces) எடுத்தார். பரலோகப் பிதாவே, அந்தத் தாயும் தகப்பனும்கூட சோர்வடையக்கூடாது என்று நான் ஜெபிக்கிறேன், ஆனால் பிதாவே, தேவன் இன்னும் ஜீவிக்கிறார், ஆளுகை செய்கிறார், உன்னதமான முறையில் கிரியை செய்ய முடியும் என்பதை அவர்கள் வந்து அறிந்துகொள்ளும்படி செய்யும். நீர் சகோதரர் கோ-வுக்கு உதவி செய்து, இயேசுவின் நாமத்தில் அவரைப் பலப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். நானே பிரச்சனையில் இருந்தால், யாராவது என்னோடு சேர்ந்து ஜெபிக்க வேண்டும், எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புவேன் என்பது எனக்குத் தெரியும். 5 இப்போது, இந்த அற்புதமான ஐக்கியத்தின் நேரத்தில் இங்கே கூடிவரும் சிலாக்கியத்திற்காகவும், முழு நற்செய்தி வியாபாரிகள் (Full Gospel Businessmen) அமைப்புடனும், இங்கு சபையிலிருக்கும் சகோதரர் பீட்டர்சனுடனும், வந்திருக்கும் மற்ற பல சகோதரர்களுடனும் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்களோடு இங்கு இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஒன்று மட்டும் என்னவென்றால், இங்கு உங்களுக்கு நிச்சயமாகக் குளிரான வானிலை இருக்கிறது. நாங்கள் தெற்கே செல்லும்போது நான் மக்களிடம் சொல்வதுண்டு, "ஓ, உங்களால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது," என்று கூறிவிட்டு, "நாங்கள் வடக்கத்தியர்கள்..." என்பேன். ஆனால் இங்கு மேலே வந்து நான் கிட்டத்தட்ட குளிரில் உறைந்து சாகும் நிலைக்கு வந்துவிட்டேன். உங்களுக்கு இங்கு உண்மையாகவே நல்ல குளிர்ந்த வானிலை இருக்கிறது. அதனால்... என்னவோ-வெப்பத்தை விட குளிராக இருப்பதே எனக்குப் பிடிக்கும், என்னால் வெப்பமான வானிலையைத் தாங்கிக்கொள்ள முடியாது, வெப்பமான வானிலையை நான் எப்போதுமே விரும்பியதில்லை. 6 ஆகவே இப்போது, கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த வாரம் நாங்கள் தெற்கு டகோட்டாவில் உள்ள சியோக்ஸ் ஃபால்ஸ் (Sioux Falls) என்ற இடத்திற்குச் செல்கிறோம். அங்கிருந்து-அங்கிருந்து நியூ ஆர்லியன்ஸுக்குச் சென்று, சகோதரர் கெய்ல் ஜாக்சனிடம் இரண்டு இரவுகளும், திரும்ப ஷிரேவ்போர்ட்டுக்கு (Shreveport) சென்று மூன்று இரவுகளும், அங்கிருந்து டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஹூஸ்டனில் ரேமண்ட் ரிச்சியிடம் (Raymond Richey) இரண்டு இரவுகளும், அங்கிருந்து பழைய மெக்சிகோவான, மெக்சிகோ நகரத்திற்கும் செல்கிறோம். அதுவே எங்களின் முதல் சுகமளிக்கும் கூட்டமாக இருக்கும். இவையெல்லாம் பிரசங்க ஆராதனைகளே. புதிய தரிசனத்தின்படி எங்களின் முதல் சுகமளிக்கும் கூட்டம் பழைய மெக்சிகோவான, மெக்சிகோ நகரத்தில் ஆரம்பமாகிறது. நாங்கள்-அதைத்தான் தரிசனம் சொன்னது, எனவே நீங்கள் அதைப் பார்க்கலாம்-நாங்கள்... சகோதரர் ஜோசப் சில இரவுகள், அதைப்பற்றி எழுதப்பட்ட சில பத்திரிகைகளோடு வருவார், அப்போது நீங்கள் அதை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள். 7 பிறகு அங்கிருந்து ஏப்ரல் மூன்றாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை சிகாகோவிற்குத் திரும்பி வருகிறோம். பதினோராம் தேதி; நாங்கள் தென் கரோலினா அல்லது வட கரோலினா என்று நினைக்கிறேன், ஸ்பின்டேலில் (Spindale) ஆரம்பிக்கிறோம், அங்கிருந்து கொலம்பியாவுக்கும், கொலம்பியாவிலிருந்து சார்லட்டிற்கும், அங்கிருந்து அலாஸ்காவிலுள்ள அங்கரேஜ் (Anchorage) என்ற இடத்திற்கும் செல்கிறோம். பிறகு மீண்டும் திரும்பி வந்து, பதினாறாயிரம் பேர் உட்காரக்கூடிய பெரிய புதிய கூடாரத்தில், புதிய வேன்கள் மற்றும் பொருட்களுடன், கூடாரத்தை ஓரிடத்தில் அமைத்து, மூன்றிலிருந்து நான்கு, மற்றும் ஆறு வாரங்கள் வரை தங்கி, கூடாரத்தை அங்கிருந்து மாற்றுவதற்கு முன், அது முடியும் வரை, தேவன் 'முடிந்துவிட்டது' என்று சொல்லும் வரை அங்கேயே தங்கியிருக்கப் போகிறோம். பிறகு இந்த இலையுதிர் காலத்தில் சகோதரர் ஆர்கன்பிரைட்டும் மற்றவர்களும் சகோதரர் மூரோடு இருக்கிறார்கள், அவர்கள் இப்போது இங்கே இல்லாததற்குக் காரணம், கர்த்தருக்குச் சித்தமானால், வருகிற இலையுதிர் காலத்தில் தென்னாப்பிரிக்கா, இந்தியா போன்ற இடங்களுக்கான பயணத்திட்டத்தை அவர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். நாம் இதுவரை கண்டிராத அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் மிகப் பெரிய ஊற்றுதலின் விளிம்பில் இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். 8 கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு அதைக் குறித்து, "ஏழாவது சந்திப்பு" (The Seventh Junction) என்ற தலைப்பில் பேச விரும்புகிறேன். உங்கள் நண்பர்களை அழைத்துவர முயற்சி செய்யுங்கள், இது கர்த்தருடைய வருகையைச் சார்ந்தது. புதன்கிழமை இரவு, கர்த்தருக்குச் சித்தமானால், "மன்னிக்கப்படாத பாவம் எது?" என்பது குறித்துப் பேச விரும்புகிறேன். எனவே, நாளை இரவு கண்டிப்பாக வர முயற்சி செய்யுங்கள், கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று விசுவாசிக்கிற மக்களையும் உங்களோடு அழைத்து வாருங்கள். என்னுடைய தலைப்பு "ஏழாவது சந்திப்பு" என்பதாக இருக்கும். எனவே நாளை இரவுக்கு... இன்றிரவு, எனக்கு மிகவும் நெருக்கமாகத் தோன்றும் ஒரு தலைப்பைக் குறித்துப் பேச விரும்புகிறேன், மேலும் இந்நாட்களில் நாம்... நான் வர முயற்சிக்கும் காரணம் என்னவென்றால்... வெளிப்புறச் சுகத்தைப் பெறுவதற்கு முன்பு நமக்கு உள்ளான சுகம் தேவை. மக்களோடு பழகிய அனுபவத்திலிருந்து அது உண்மை என்று எனக்குத் தெரியும். நமக்குச் சரீர சுகம் கிடைக்கும் என்பது சரிதான்; அது-அதுவாகவே நடக்கும். ஆனால் முதலாவது நாம் உள்ளான சுகத்தைப் பெற வேண்டும். நாம் எவ்வளவுதான்-எவ்வளவுதான் உண்மையாக இருக்க முயற்சித்தாலும், கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்று எவ்வளவுதான் நினைக்க முயற்சித்தாலும், அவர் இருக்கிறார் என்பது உண்மைதான், ஆனாலும், சுகமளிப்பதற்கும், ஜெபிக்கப்படும் தனிநபரின் விசுவாசத்திற்கும் நிச்சயமாக ஒரு தொடர்பு இருக்கிறது; அவர்களுக்குத் தாங்களாகவே விசுவாசம் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது நடக்காது, அது ஒருவேளை தனிப்பட்ட ஒருவருக்காக அனுப்பப்பட்ட தரிசனமாக இருந்து, தேவன் தம்முடைய முன்னறிவினால் அப்படி நடக்கும்படி முன் குறித்திருந்தால் மட்டுமே ஒழிய, நீங்கள் அவற்றைக் கேள்விப்படும்போதும்-அறியும்போதும் அது நடக்கும். 9 ஆனால் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து இந்த பூமியில் இருந்த காலத்திலும்கூட, பிதாவானவர் அவருக்குக் காண்பித்திருந்தாலொழிய, அது அவர்களுடைய விசுவாசத்தின்படியே நடந்தது. குருடனையும் மற்றும் பலரையும் நினைத்துப் பாருங்கள். "நீ விசுவாசிக்கக்கூடுமானால்... நீ விசுவாசித்தால், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்," மற்றும் இதுபோல இன்னும் பல. அது எப்பொழுதும் தனிநபரின் விசுவாசத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இன்று சபை அத்தகைய ஒரு கொந்தளிப்பில் இருக்கிறது, ஓ, என் தேவனே. அதை நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது, ஆனால் அதுதான் உண்மை. நாம்... சபை ஒரு பயங்கரமான கொந்தளிப்பில் இருக்கிறது, அதாவது உலகளாவிய ரீதியில் சொல்கிறேன். நீங்கள் எங்கே சென்றாலும் எல்லாம் நடந்துகொண்டிருப்பது போலவே தெரிகிறது. எனவே நமக்குத் தேவையானது, கிறிஸ்து இயேசுவின் மேலான உண்மையான அடிப்படை விசுவாசத்தின் உள்ளான சுகமே, அப்போது வெளிப்புறச் சுகம் தானாகவே நடக்கும். அப்படிச் சுகமளித்தல் தொடங்கும்போது, சரீர சுகத்திற்காக அது உள்ளேயிருந்து ஆரம்பித்து வெளியே செல்லும், அப்போது ஒன்று நடக்கும், அது நிலைத்திருக்கும் மற்றும் உண்மையானதாக இருக்கும். 10 கூடாரங்கள்-செய்யப்படுவதற்காக நான் காத்துக்கொண்டிருந்தபோது, இதைச் செய்ய வேண்டும் என்று நானே பொறுப்பேற்றுக் கொண்டேன். கூடாரத்தைப் பற்றியும், இந்த பெரிய செலவுகளைப் பற்றியும் யோசிக்கும்போது, நான் ஏன் ஊழியக் களத்தை விட்டு வெளியேறினேன் என்பதைத் தரிசனத்தில் நீங்கள் காண்கிறீர்கள், ஏனென்றால் நான்-மக்களிடம் பணத்துக்காகக் கெஞ்சுவதற்குப் பதிலாக ஒரு கூட்டத்தில் பதினைந்தாயிரம் டாலர்கள் கடனாளியானேன்; நான் அப்படிச் செய்ய மாட்டேன். நான்-நான் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன், அதனால் அப்படிச் செய்யாமல் களத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன். இப்போது, மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பி, கலிபோர்னியாவில் பதினைந்தாயிரம் டாலர்கள் கடனாளியாக இருக்கும் நிலையில், இந்தக் கூடாரத்துடன் செல்வதற்காக ஒரு லட்ச ரூபாய் (நூறாயிரம் டாலர்களை) கடனாக வாங்குகிறேன். இதன் அர்த்தம் என்னவென்றால், நான்-நான்-நான் பேசுவதை விசுவாசிக் கிறேன். ஆம், ஐயா. இது கர்த்தரிடமிருந்து வந்தது; இது கர்த்தரிடமிருந்து வந்தது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், உண்மையான நல்ல நண்பர், பணக்காரர், ஆனால் கர்த்தருடைய ஊழியக்காரர், "சகோதரர் பிரான்ஹாம், ஒரு பைசாகூட வட்டி இல்லாமல் நான் அதை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் வாங்கிய அசல் தொகையைத் தவிர வேறு எதையும் திருப்பிக் கொடுக்க வேண்டாம். நீங்கள் இதற்கு எந்த வட்டியும் செலுத்தத் தேவையில்லை" என்றார். சரி, அது அற்புதமாக இருந்தது. பார்த்தீர்களா? நான் சொன்னேன், "உமக்கு நன்றி, ஆண்டவரே. நீர் கூடவே சென்று கொண்டிருக்கிறீர் என்பதை நான் அறிவேன்." 11 இப்போது சொல்கிறேன், அந்தத் கூடாரத்தை இங்கே எங்காவது ஒரு இடத்தில் அமைத்து, இங்கே சுமார் ஆறு வாரங்கள், அதிலும் குறிப்பாக இரட்டை நகரங்களில் (Twin Cities) அமைத்து-ஒவ்வொரு சபையோடும் சேர்ந்து சுமார் ஆறு வாரங்கள் எழுப்புதல் கூட்டத்தை நடத்த விரும்புகிறேன். உங்களுடைய தடைகளையும் வித்தியாசங் களையும் இப்போது விட்டுவிடுங்கள், மேலும்... எல்லாரும் வந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக்கொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கும். ஒரு நபருக்காக வெறுமனே ஜெபம் செய்துவிட்டு, பிறகு சத்துரு மீண்டும் அவர்களைத் தாக்க வரும்போது, அவர்களை மீண்டும் கொண்டுவருவது மட்டுமல்ல, மாறாக எல்லாம் முடியும் வரை அங்கேயே தங்கியிருப்பதே செய்ய வேண்டிய காரியம். மேலும் தேவன், "சரி, நான் இப்போது முடித்துவிட்டேன், வேறு இடத்திற்குச் செல்" என்று சொல்லும் வரை, அதை நான்கு முதல் ஆறு வாரங்கள் அல்லது அதுபோல ஒவ்வொரு இரவும் தொடர்ந்து நடத்துவதே சரியானதாக இருக்கும். அதுவே நாம் கொண்டிருக்க வேண்டிய எழுப்புதலாக இருக்கும். இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று நான் அடிக்கடி ஆச்சரியப் பட்டிருக்கிறேன்; ஒவ்வொரு இரவும் அது எப்பொழுதும் வேகத்தை அதிகரிக்கிறது. போதுமான அளவு நீண்ட காலம் தங்கியிருந்தால் அது என்ன செய்யும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். இது எப்படி நடந்தது என்று ஆச்சரியப்பட, நான் எல்லாவற்றையும் சரிசெய்துவிட்டு எனது முதல் கூட்டத்திற்காக பீனிக்ஸ் (Phoenix) நகருக்குச் செல்லவிருந்தேன். ஏனெனில் சகோதரர் ராபர்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கும்போது, அங்கு அவருக்குப் பதிலாகச் செயல்படுவதாக (pinch-hit) நான் பாதியளவுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். 12 நான் அவற்றைச் செய்யச் சென்றுகொண்டிருக்கும்போது, ஏன், திரு. ஆலன் உள்ளே வந்தார், அவர் மார்ச் மாதம் வரை அங்கிருந்து செல்லப்போவதில்லை, தரிசனத்தில் அது வேறொரு நாட்டில் உள்ள கறுப்பு நிற மக்கள் என்று சொல்லப்பட்டதை நான் மறந்துவிட்டேன். பிறகு திரு. ஆலன் அந்த இடத்தை எடுத்துக்கொண்டார், பின்பு, "சரி, நீங்களும் எப்படியும் வர விரும்புகிறீர்களா? திரு. ஆலன் தங்கியிருக்கப் போகிறார்" என்று கேட்கப்பட்டது. அதற்கு நான், "ஓ, இல்லை, ம்ஹும். இல்லை, சகோதரர் ஆலன் அங்கே இருந்தால் வேண்டாம்; நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் அங்கே இருக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னேன். பிறகு சுமார் இரண்டு நாட்களுக்குப் பின், கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார், அவர், "அந்தத் தரிசனத்தில் நான் உன்னை பீனிக்ஸ் நகருக்குச் செல்லும்படி சொல்லவே இல்லை, அது கறுப்பு நிற மக்கள் மத்தியில், பழைய மெக்சிகோவில் நடக்கும்" என்றார். நான், "சரி, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று நினைத்தேன். இது மிகச் சரியானது. உங்களுக்குத் தெரியுமா, தேவன், அவர்-அவருடைய இறையாண்மையுள்ள கிருபை நம்முடைய தவறுகளையும் அறியாமையையும் மேலெழுந்து நிற்கும். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? சரி, அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம், இன்றிரவு நாம் அவரை நேசிக்கிறோம். இன்றிரவு சபையில் நாம் ஒரு சிறிய கூட்டமாகவே இருக்கிறோம், ஆனால் நாம் இந்த நோக்கத்திற்காகவே, அதாவது அழிந்துபோன ஆத்துமாக்களின் நன்மைக்காகவும் தேவனுடைய ராஜ்யத்திற்காகவும் கூடியிருக்கிறோம். 13 இப்போது, இன்றிரவு நான் "மறைக்கப்பட்ட ஜீவியம்" (The Hidden Life) என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இன்றிரவு வேதவாசிப்புக்காக எபிரெயர் 10-ம் அதிகாரத்தில், 19-ம் வசனம் முதல் சிலவற்றை வாசிக்க விரும்புகிறேன், நான் இதை வாசிக்கிறேன்: ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிற படியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியா யிருக்கக்கடவோம்; (வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.) தமது வார்த்தையை வாசிப்பதின்மேல் கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 14 இப்போது, இன்றிரவு நான் இதைப் பற்றிப் பேச விரும்புவதற்குக் காரணம் இதுதான்: நேற்றிரவு நாம் 'ஐக்கியம்' (Fellowship) குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அதை நீங்கள் அனுபவித்தீர்களா? ஐக்கியத்திற்குள்... வருவது. நான் ஒரு-ஒரு போதகரோ அல்லது-சிறந்த ஒரு பிரசங்கியோ கிடையாது, ஏனென்றால் நான் அதிகம் படித்தவன் அல்ல. ஆனால் தேவையென்ன என்பதை நான் பார்க்கிறேன், என்னால் முடிந்தவரைச் சிறப்பாக அதைத் தொட முயற்சிக்கிறேன். இப்போது, நான்-நான் நீங்கள் எல்லாரும் என்னைப் பொறுத்துக் கொள்வீர்கள்-பொறுத்துக் கொள்வீர்கள், அல்லது-எப்படியும் என்னோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாம் ஒரு சுகமளிக்கும் ஆராதனையை நடத்துவதற்கு முன்பே இங்கே ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக அதை நான் தொட முயற்சிப்பதால், கொஞ்ச நேரம் இதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். நாம் இந்தக் காரியங்களை வழியிலிருந்து அகற்றிவிட வேண்டும், அதன்பிறகு ஆராதனைகளைத் தொடரலாம். ஆனால் இப்போது, நேற்றிரவு நாம் ஐக்கியம் கொள்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்பதை நான் விளக்க முயற்சித்தேன், அது நம்முடைய சபைகளின் மூலமாகவோ, அல்லது நம்முடைய பிரிவுகளின் மூலமாகவோ, கல்வியின் மூலமாகவோ, அல்லது வேறு எந்தவொரு காரியத்தின் மூலமாகவோ அல்ல, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக மட்டுமே ஆகும், சமாதானப்படுத்தும் அந்த மாபெரும் கிரியையின் மூலமாக மனிதன் தேவனோடு ஒப்புரவாவதற்கு அது ஒன்றே வழியாகும். இதை நான் எப்படி எடுத்துக்கொள்ள முடியும் என்றால், பழைய ஏற்பாட்டிற்குத் திரும்பிச் சென்று அதை புதிய ஏற்பாட்டில் ஒப்பிட்டுப் (type) பார்ப்பதுதான் ஒரே வழியாகும். ஏனென்றால் நான் ஒருவிதத்தில் முன்மாதிரிகளை ஆராய்பவன் (typologist). நான் அப்படிச் செய்வதற்குக் காரணம், கல்வியறிவு இல்லாததே. புதிய ஏற்பாட்டிற்கு நிழலாக அல்லது முன்மாதிரியாக இருந்த பழைய ஏற்பாடு என்னவாக இருந்தது என்பதை நான் கண்டறிகிறேன். பிறகு நிழல் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும், நான் அதைப் பார்க்கிறேன்-அதன் நிஜ உருவத்தை (antitype) இங்கே காண்கிறேன். இரண்டிற்கும் இடையிலுள்ள ஆவியானவர் சாட்சி கொடுக்கிறார். அப்படித்தான் நான்-இப்படித்தான் என்னால் வேதாகமத்தைப் போதிக்க முடிகிறது. 15 சிலர் கெட்டிக்காரர்களாகவும் கூர்மையான அறிவாளிகளாகவும் இருக்கிறார்கள்; அவர்களால் கிரேக்க வார்த்தைகள் போன்றவற்றைக் கண்டறிய முடியும். அதெல்லாம் எனக்கு அந்நியபாஷையில் பேசுவது போலத்தான் இருக்கிறது, ஏனென்றால் நிச்சயமாக அது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த முன்மாதிரிகளையும் நிழல்களையும் நான் அறிந்துகொண்டு, அவற்றை ஒன்றாக இணைக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் தேவன் அதை வெளிப்படுத்துவார் என்பது என் உறுதியான நம்பிக்கையாகும், அப்போது ஒருவேளை நாளை என்ற ஒன்று இருந்தால் நாளைய ஆண்களாகவும் பெண்களாகவும் மாறப்போகிற இங்குள்ள சிறு குழந்தைகள்கூட, ஏன் குழந்தைகள்கூட இதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றிரவு நான் பேசவிருக்கும் "கிறிஸ்துவுடன் மறைக்கப்பட்ட ஜீவியம்" என்பதன் முழுப் படத்தைப் பெறுவதற்கு, ஆண்களும் பெண்களும் பிரச்சனை என்னவென்பதைக் கண்டுபிடிப்பது இன்று மிகவும் அவசியம் என்று காண்கிறேன். இப்போது, நான் இதை என் முழு இருதயத்தோடும் தாழ்மையுடன் சொல்கிறேன், நிச்சயமாக நான் மின்னியாபோலிஸில் (Minneapolis) போதுமான அளவு இருந்திருக்கிறேன், அதனால் உங்களுக்குத் தெரியும்... நான் வஞ்சகனாக இருந்தால், அப்படி இருக்க நான் எண்ணவில்லை; அது என் இருதயத்தில் இல்லை. நான் ஒருபோதும் வஞ்சகனாக இருக்க நினைக்கவில்லை. நான் விரும்புகிறேன்... நான் மக்களை நேசிக்கிறேன், மக்களோடு பேச விரும்புகிறேன். சில நேரங்களில் நான் உணரும் விதத்தை என்னால் வெளிப்படுத்த முடியாமல் போகலாம், ஆனால் நான்-நான் அதைச் சரியாக வெளிப்படுத்தாவிட்டாலும், நான் உணரும் விதத்திலேயே நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 16 நாம் வாழும் இந்தக் காலத்தில், கிறிஸ்தவ மக்களிடையே ஒரு பெரிய தேவை இருப்பதை நான்-நான் உணர்கிறேன், தங்களால் பெற முடியாத ஏதோ ஒன்றை அவர்கள் விரும்புவது போல் தெரிகிறது. அதைப் பார்ப்பதினாலும், நான் பேசும் காரியத்தின் அனுபவம் எனக்கு இருப்பதினாலும், அதை என் தாழ்மையான வழியில் விளக்க முயற்சிப்பது நிச்சயமாக ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், அப்போது கல்வாரியில் கிறிஸ்து நமக்காக விலைகொடுத்து வாங்கிய இந்த மகத்தான காரியத்தில் நீங்களும் இணைந்து பங்குகொள்ள முடியும். இப்போது, இவையெல்லாம் பாவநிவாரண பலியின் (atonement) மூலமாகவே வருகின்றன; நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் பாவநிவாரண பலியின் மூலமாகவே வருகிறது. பாவநிவாரண பலிக்கு வெளியே எந்த ஆசீர்வாதங்களையும் நாம் போதிக்க முடியாது. சுகமளித்தல் மற்றும் மற்ற எல்லாமே பாவநிவாரண பலியின் மூலமாகவே வர வேண்டும், ஏனென்றால் ஆதாமின் பாவத்தினால் நம்மேல் வந்த சாபத்திலிருந்து நம்மை மீட்பதற்காகவே அவர் மரித்தார். 17 நீங்கள் பாவம் (s-i-n) என்ற வார்த்தையைக் கையாளும் எந்த நேரத்திலும், அதோடு வரும் ஒவ்வொரு பண்புகளையும் நீங்கள் கையாள வேண்டும். சரீர சுகத்தைப் பிரசங்கிக்காமல் ஆத்துமாவிற்கான இரட்சிப் பைப் பிரசங்கிக்க முடியாது; உங்களால் அப்படிச் செய்யவே முடியாது. நீங்கள் வேதாகமத்தை அப்படித் துண்டிக்க முடியாது, ஏனென்றால் அது-அதை பிரிக்க முடியாது. அதே மனிதர்தான் சிலுவையில் மரித்தார், அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் அதே நாளில்தான் குணமானோம், அதே நரம்புகளிலிருந்து வந்த இரத்தம்தான் அது. பார்த்தீர்களா? எனவே நீங்கள்-இதைப் பிரிக்க முடியாது. சற்று காலத்திற்கு முன்பு ஒரு நபர் என்னிடம் வந்து, "ஏன் சகோதரர் பிரான்ஹாம், பாவநிவாரண பலியின் மூலம் தெய்வீக சுகத்தைப் பிரசங்கிக்கிறீர்கள்?" என்று கேட்டார், "சரி, அது முடிந்துவிட்டது என்பதை என்னால் உங்களுக்கு நிரூபிக்க முடியும்" என்றார். அதற்கு நான், "சரி, பாவநிவாரண பலியிலிருந்து வெளியே என்றால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நிச்சயமாக. ஏசாயா சொன்னபடி அவர் நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு..." என்றார். நான், "அது சரிதான்" என்றேன். "அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்." அவர் சொன்னார், "இப்போது, மத்தேயு 8-ல், அந்த மாலையில் தன்னிடம் வந்த மக்களை இயேசு சுகமாக்கினார், அவர் நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டார் என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படியே இப்படி நடந்தது." நான் சொன்னேன், "அப்படியானால், அது எதைப்பற்றிப் பேசுகிறதோ, அந்த நேரத்தை நீங்கள் அங்கே பாவநிவாரண பலிக்குப் பொருத்துகிறீர்களா? ஏன், அது உண்மையாக இருந்தால், இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்ட பிறகு இருந்ததைவிட, பாவநிவாரண பலி நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அதிக வல்லமையைக் கொண்டிருந்ததே" என்றேன். "அது அவர் மரிப்பதற்கு ஒரு வருடம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த காரியம். பாவநிவாரண பலி செலுத்தப்படுவதற்கு ஒரு வருடம் ஆறு மாதங்களுக்கு முன்பே நடந்த ஒன்றின்மீது, பாவநிவாரண பலியை எப்படிப் பொருத்த முடியும்?" 18 எனவே பார்த்தீர்களா, அந்த விவாதம் நிலைக்காது. ஆனால் நாம் விவாதிப்பதற்காக அல்ல; நாம் வார்த்தையைப் பிரசங்கிக்கவே இருக்கிறோம், தேவன் அதைக் கேட்டு ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை வைத்திருப்பார். அது... வார்த்தையைக் கேட்கும்படி யாருக்காக இயேசு மரித்தாரோ, அவர்கள் அதைக் கேட்பார்கள். நீங்கள் எப்போதாவது அதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா? நான் மதகுருமார்களையும் அறிஞர்களையும் சந்திக்கிறேன் என்பதை உணர்ந்து, ஒரு கணம் இங்கே நிறுத்திக்கொள்ளலாமா, ஆனால் நான் இதை மட்டும் சொல்ல விரும்புகிறேன், நான் இதை விசுவாசிக்கிறேன், இது எனக்குத் தெரியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்: ஏதோவொரு தற்செயலான நிகழ்வுக்காக இயேசு ஒருபோதும் சிலுவைக்குச் சென்று மரிக்கவில்லை. அவர் மரித்ததை நினைத்து யாராவது ஒருவேளை அனுதாபப்படலாம், அதனால்-அதனால் அவர்கள் இரட்சிக்கப்பட வரலாம். தேவன் தம்முடைய காரியங்களை அப்படி நடத்துவதில்லை. உலகம் தோன்றுவதற்கு முன்பே, யாருடையவர்கள் தம்முடையவர்கள், தமக்குச் சொந்தமானவர்கள் என்பதை அறிந்து, தேவன் தமது முன்னறிவைக் கொண்டு தமது காரியங்களை நடத்துகிறார். 19 நாம் தேவனுடைய முன்னறிவில் இருந்தோம், உலகத்தின் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்பே நாம் இரட்சிக்கப்பட்டோம். தேவன் தமது முன்னறிவினால் யாரைத் தெரிந்துகொண்டாரோ அவர்களுக்காகவே மரிக்க இயேசு வந்தார். அது சரிதான். அந்தப் கடைசி நபர்... அந்த காரணத்திற்காகத்தான் நாம் அமெரிக்கா முழுவதும் எழுப்புதல் கூட்டங்களை நடத்தி, எங்கும் வலைகளை வீசி, மீன்களைப் பிடிக்கவும் இழுக்கவும் முயற்சிக்கிறோம். அதுதான் ஊழியர்கள் செய்கிறார்கள். ஆனால் அந்தக் கடைசி நபர் எடுக்கப்படும்போது, அதோடு எல்லாம் முடிந்தது. புரிகிறதா? ஏன், மற்றவர்கள், அவர்கள்... நாம் ஒரு வலையை வீசி மக்களைக் கூட்டுகிறோம், அவர்கள் உள்ளே வருகிறார்கள், பிறகு முதலில் உங்களுக்குத் தெரிவது என்னவென்றால், அவர்கள் விலகிச் சென்றுவிடுகிறார்கள். தேவன் சொன்னார், "சோதனைகள் வரும்போது, நாம் சிட்சையைச் சகிக்க முடியாவிட்டால், நாம் தேவனுடைய பிள்ளைகள் அல்ல, நாம் வேசிப்பிள்ளைகளாயிருக்கிறோம்" என்று. ஆனால், உண்மையிலேயே தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்த எந்தவொரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, தங்கள் வாழ்க்கையில் இனி பாவத்தின் மீது எந்த ஆசையும் இருக்காது, ஒருபோதும் இருக்கவும் செய்யாது என்று நான் விசுவாசிக்கிறேன். அது உண்மைதான். ஏனென்றால் பாவத்தின் கேள்வி என்றென்றைக்குமாகத் தீர்க்கப்பட்டுவிட்டது. நீங்கள் ஒரு சிருஷ்டியாக, புதிய சிருஷ்டியாக, புதிய படைப்பாக மாறுகிறீர்கள். உங்களின் பழைய இச்சைகள் மற்றும் மற்ற எல்லாமே மாறிவிடுகிறது. 20 இப்போது, இந்தக் கிறிஸ்தவ அனுபவத்தின் பாதையில் நாம் மக்களைக் காண்கிறோம், அவர்களில் பலர், காரியங்களைச் சாதாரணமாகப் பிடித்துக்கொள்ள முடியாதது போலத் தோன்றும் மக்களைக் காண்கிறார்கள். சும்மா-அவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஒரு நாள் அவர்களைப் பார்த்தால், வீட்டின் மேல்தளத்தில் நின்று தேவனைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். அடுத்த நாள் அவர்களைப் பார்த்தால், அவர்கள் எல்லாரும் கீழே (அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு என்னை மன்னியுங்கள்) குப்பைமேட்டில், மிகவும் கீழே, தாழ்வான நிலையில், தாங்கள் எங்கே நிற்கிறோம் என்று தெரியாமல், தாங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா இல்லையா என்று கூடத் தெரியாமல் இருப்பார்கள். அடுத்த நாள் அவர்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பார்கள். ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களைப் பார்த்தால் மீண்டும் அதே நிலையில் இருப்பார்கள். அந்த மக்களைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். சுகமளிக்கும் கூட்டங்களில் நான் அவர்களைக் கண்டிருக்கிறேன். மக்கள் மேடைக்கு வருவதை நான் பார்த்திருக்கிறேன், முற்றிலுமாகக் குருடர்களாக வருவார்கள். வந்து-ஜெபிக்கப்பட்ட பிறகு, சுகமடைந்து வேதாகமத்தை வாசித்து, அங்கிருந்து தேவனைத் துதித்துக்கொண்டே இறங்கி நடப்பார்கள். ஆறு மாதங்களில் அவர்களைச் சந்தித்தால், ஆரம்பத்தில் இருந்ததைப் போலவே மீண்டும் குருடர்களாக இருப்பார்கள். 21 ஜான் சர்ச் (John Church) என்ற மனிதர், பரிசுத்தக் கூட்டத்தாராகிய உங்களுக்கு, தமது புத்தகத்தில் என்னைக்குறித்து ஒரு மோசமான கட்டுரையை எழுதியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு புத்திசாலி மனிதர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவர், "எனக்கு திரு. பிரான்ஹமைத் தெரியவே தெரியாது," என்று சொல்லிவிட்டு, பின்பு என்னைக்குறித்து எழுதியிருக்கிறார். ஒரு மனிதனை நியாயந்தீர்க்கும் முன்பு அவனைக் குறித்து நாம் விசாரிக்க வேண்டும் என்று சட்டமே சொல்கிறது-அப்படி ஒரு சட்டம் நம்மிடம் உள்ளது. எனவே, அவர் சட்டம் செய்கிற அளவுக்குக் கூட சரியாகச் செயல்படவில்லை. எனவே நாம் அதைவிடச் சிறந்த ஒரு நியாயப்பிரமாண காலத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர், "எனக்கு அந்த மனிதரைத் தெரியவே தெரியாது. ஆனால் அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று நான் அறிந்துகொண்டதற்கான காரணம் இதுதான்," என்று கூறினார். அவர் சொன்னார், "ஏனென்றால் அவர்-ஒரு முறை ஒரு பெரிய மைதானத்தில், ஒரு கலையரங்கத்தில் நடந்த கூட்டத்தில் அமர்ந்திருந்ததாகச் சொன்ன ஒரு மனிதரை நான் சந்தித்தேன், திரு. பிரான்ஹமுக்கு என்னை யாருன்றே தெரியாது, ஆனால் அவர் என்னைக் கூப்பிட்டு, 'ஐயா, நீங்கள் ப்ரோஸ்டேட் (prostate) வியாதியால் கஷ்டப்படுகிறீர்கள், கர்த்தர் உரைக்கிறதாவது (THUS SAITH THE LORD), நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள்' என்று கூறினார்." மேலும் அவர், "நான் அந்த மனிதனிடம், நீங்கள் குணமானீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், 'நான் ஒரு வருடம் முற்றிலும் சுகமாக இருந்தேன்' என்றார். அவர் சொன்னார், 'பின்னர் அது மீண்டும் என்னிடம் வந்துவிட்டது.'" அவர் கூறினார், "திரு. பிரான்ஹம் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதை இது நிரூபிக்கிறது." சரி, நான் நினைத்தேன், "திரு. சர்ச், அங்கே சில்வர் ஹில்லில் (Silver Hill) நீங்கள் ஒவ்வொரு வருடமும் உங்கள் கூட்டத்தை நடத்துகிறீர்கள், அங்கே வருகிற மக்கள் அனைவரும் பரிசுத்தமாக்கப்படுதலை உரிமை கொண்டாடுகிறார்கள். அடுத்த வருடம் நீங்கள் திரும்பி வரும்போது அவர்கள் அனைவரும் மீண்டும் பரிசுத்தமாக்கப்பட வேண்டும், நீங்கள்-அவர்கள் முதலில் அதைப் பெற்றபோது அது ஒரு ஏமாற்று வேலை என்று நான் நினைக்கிறேன்." 22 இப்போது, இல்லை, தெய்வீக சுகமளித்தல் என்பது உங்கள் விசுவாசம் எவ்வளவு-எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ அவ்வளவு உறுதியானதாகவும், உங்கள் விசுவாசம் எவ்வளவு நிலைத்திருக்கிறதோ அவ்வளவு நிலைத்திருப்பதாகவும் இருக்கிறது. கிறிஸ்தவ வர்த்தகர் (Christian Businessmen) அமைப்பைச் சேர்ந்த போதகர் நிக்கல்ஸ் (Rev. Nickels), கடந்த நாளான்று நகரத்தில் சாட்சிகளைச் சேகரித்துக்கொண்டும், எங்குப் பார்த்தாலும் தெய்வீக சுகமளித்தலால் குணமடைந்த மக்களின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டும் இருந்தார், நான் சொல்வது புற்றுநோய்கள் மற்றும் மரணத் தறுவாயில் இருந்தவர்களைப் பற்றி, அவர்கள் பல ஆண்டுகளாக, பல பல ஆண்டுகளாக குணமடைந்து, பதினான்கு, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்காக ஜெபிக்கப்பட்டபோது, இப்போதும் ஆரோக்கியமாக நிலைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் அங்குள்ள லூயிஸ்வில்லில் (Louisville) உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் இறந்தவர்கள் பட்டியலில் இருந்தனர், அவர்கள் பதினான்கு, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர், ஆனால் இதோ அவர்கள் இப்போது எவ்வளவு ஆரோக்கியமாக இருக்க முடியுமோ அவ்வளவு ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கே சென்று அந்தப் பதிவேடுகளை-புத்தகங்களை ஆராய்ந்து பாருங்கள், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் புற்றுநோயால் இறந்துவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடிப்பீர்கள். ஆனால் இதோ அவர்கள் இப்போது எவ்வளவு நலமாக இருக்க முடியுமோ அவ்வளவு நலமாக இருக்கிறார்கள், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும். 23 இது உங்கள் விசுவாசம் எங்கே நிற்கிறது என்பதைப் பொறுத்தது. உங்கள் அறிக்கை நன்றாக இருக்கும் வரை உங்கள் இரட்சிப்பும் நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் அறிக்கை குறையும்போது, உங்கள் இரட்சிப்பும் போய்விடுகிறது. ஏனென்றால், அவர் உங்கள் அறிக்கையின் பேரில் பரிந்து பேசுவதற்காக தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிரதான ஆசாரியராக இருக்கிறார், அதுதான் நடக்கிறது. எனவே, இரட்சிப்பு மற்றும் சுகமளித்தல் ஆகியவற்றில், மக்கள் ஏன் இந்த குறைந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். இப்போது, அதற்கான காரணத்தை நான் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பயபக்தியுடன் இருந்து இப்போது உன்னிப்பாகக் கவனித்தால், நான் அதை உங்களுக்கு விளக்க முடியும் என்று நம்புகிறேன். 24 வேதாகமத்தில், அதை ஒரு பழைய ஏற்பாட்டு நிலைப்பாட்டில் இருந்து, ஒரு பார்வையில் எடுத்துக்கொண்டால், பல ஆண்டுகளுக்கு முன்பு வனாந்திரத்தில் தேவன் இஸ்ரவேல் புத்திரர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது, அது உலகத்தின் ஒரு நிழலாக இருந்தது... மேலும் அவர்களுடைய பிரயாணத்தில், அது நாம் இன்று இருக்கும் பிரயாணத்தின் ஒரு நிழலாகும். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கான தங்கள் வழியில் இருந்தனர், நாமும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கான நமது வழியில் இருக்கிறோம். அதை நீங்கள் நம்புகிறீர்களா? தேவன் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்துகொண்டிருக்கிறார். எகிப்து என்பது உலகம், அடிமைத்தனம் மற்றும் சிறையிருப்பின் ஒரு நிழலாக இருந்தது. அவர் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறார், விசுவாசிகளுக்காக தேவன் வாக்குத்தத்தம் பண்ணிய தேசத்திற்கு நாம் செல்லும் வழியில் இருக்கிறோம். இன்றிரவு நாம் அந்தப் பிரயாணத்தில் இருக்கிறோம் என்பதை அறிவது அற்புதமாக இல்லையா? மேலும் கவனியுங்கள், இப்போது அந்தப் பிரயாணத்தில், அவர்களுக்கு எல்லாம் எளிதாக இருக்கவில்லை. அவர்களுக்கு ஏற்றத் தாழ்வுகள், பிரச்சனைகள், பின்மாற்றங்கள் இருந்தன, மற்றும்-ஆனாலும், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றார்கள். அங்கே நீங்கள் கவனித்தால், அவர்களில் சிலர் முறுமுறுத்தார்கள், சிலர் குறைகூறினார்கள். அவர்கள் தரிசனங்களைக் கண்டார்கள், மேலும் பலவற்றையும் கண்டார்கள், தேவன் ஆச்சரியமான அற்புதங்களை இறங்கச் செய்தார், அவர்கள் மத்தியில் வல்லமையான கிரியைகளைச் செய்தார். ஆனால் சோதனைகள் வந்தவுடனே, அவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, மீண்டும் முறுமுறுக்கவும் குறைகூறவும் தொடங்கிவிட்டார்கள். 25 இன்று சபை இப்போது நிற்கும் நிலையில், அதனுடைய அதே சித்திரமாகவே இருக்கிறது. தேவன் அப்போதே எப்படி ஒரு சித்திரத்தைக் கொடுத்தார் என்பதைக் கவனியுங்கள், இதை நிரூபிக்க நாம் ஆசரிப்புக் கூடாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது, ஆசரிப்புக் கூடாரம் ஒரு ஆராதனை ஸ்தலமாக இருந்ததை நாம் காண்கிறோம்; நேற்றிரவு நாம் அதைப் பற்றிப் பேசினோம். தேவன் மக்களைச் சந்தித்த ஒரே இடம், ஒரே பொதுவான தளம், சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் உள்ள ஆசரிப்புக் கூடாரத்தில்தான். இப்போது ஆசரிப்புக் கூடாரத்தில் மூன்று வெவ்வேறு பிரகாரங்கள் அல்லது இடங்கள் இருந்தன, அவற்றின் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க நான் விரும்புகிறேன். அவற்றில் ஒன்று வெளிப் பிரகாரம், பிரகாரம். பின்பு-பலிபீடம், அது ஒரு பரிசுத்த ஸ்தலமாக இருந்தது, பின்னர் மகா பரிசுத்த ஸ்தலம், அங்கு பிரதான ஆசாரியர் மட்டுமே வருஷத்திற்கு ஒருமுறை செல்வார், அந்தப் பரிசுத்த ஸ்தலத்தின் பின்னால் அவரைப் பின்தொடர யாரும் துணிய மாட்டார்கள். 26 இப்போது, நாம் கவனித்தால், அந்த-அந்த இடங்களில் தளவாடங்கள் மற்றும் பல பொருட்கள் எவ்வாறு வைக்கப்பட்டிருந்தன என்பது, இருண்ட காலத்திலிருந்து (Dark Age) நாம் வாழ்ந்து வரும் காலங்களையும், அல்லது சபையானது வெளியே வருவதையும், அதன் பிரயாணத்தின் தொடர்ச்சியையும் குறிக்கிறது. இப்போது, வெளிப் பிரகாரங்கள் நீதிமானாக்கப்படுதலைக் குறிக்கின்றன,-அங்கே தண்ணீர் ஞானஸ்நானம் இருந்தது, தொட்டி அங்கே வைக்கப்பட்டிருந்தது, அவர்கள் ஊழியம் செய்வதற்கு முன்பாக அங்கே கழுவப்பட்டார்கள். மேலும் பலிபீடமானது பலியிடும் இடத்தைக் குறிக்கிறது, அங்கு-தண்டனை வைக்கப்பட்டது அல்லது அகற்றப்பட்டது, ஏனென்றால் நியாயத்தீர்ப்பு அந்தப்-பலியின் மீது வைக்கப்பட்டது, வெண்கலப் பலிபீடமும் வெண்கலமும் தெய்வீக நியாயத்தீர்ப்பைப் பற்றிப் பேசுகின்றன. வனாந்திரத்தில் இருந்த வெண்கலச் சர்ப்பம் தெய்வீக நியாயத்தீர்ப்பைப் பற்றிப் பேசியது, ஏதேன் தோட்டத்தில் சர்ப்பம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்ட பாவமாக இருந்தது, மேலும் வெண்கலம் தெய்வீக நியாயத்தீர்ப்பைப் பற்றிப் பேசியது [சகோதரர் பிரான்ஹம் தனது தொண்டையைச் செருமுகிறார்] (என்னை மன்னியுங்கள்.), பலி சுட்டெரிக்கப்பட்ட வெண்கலப் பலிபீடத்தைப் போல. 27 பின்பு அங்கே அவர்கள் ஏழு பொன் குத்துவிளக்குகளை வைத்திருந்தார்கள், பின்பு-சரியாகச் சொன்னால் ஒரு ஏழு கிளைகளைக் கொண்ட விளக்கு. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ளே ஒரு பெட்டி இருந்தது. அந்தப் பெட்டியில்-கற்பலகைகள் இருந்தன, நாம் அவற்றை பத்துக் கட்டளைகள் என்று அழைக்கிறோம். அது-மனித இருதயத்தைக் குறிப்பதாக இருந்தது. எவ்வாறெனில், கடந்த நாட்களில் தேவன் எவ்வாறு வாக்குத்தத்தம் செய்தாரோ, இந்த நாளில் அவர் தமது நியாயப்பிரமாணங்களைக் கற்பலகைகளில் அல்ல, இருதயத்திலே எழுதுவேன் என்று, அவர் நியாயப்பிரமாணத்தை இருதயத்தில் வைப்பார். எசேக்கியேல் இதைப் பற்றிப் பேசினார். தேவன் வரப்போகும் நாட்களில் அதை எவ்வாறு செய்வார் என்று தீர்க்கதரிசிகள் அனைவரும் பேசினார்கள், இது ஒரு நிழலாக இருந்தது. ஆனால் பிரதான ஆசாரியர் ஒருமுறை இந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றவுடன், திரை கீழே விழுந்தது, சத்தமே கேட்காதபடிக்கு, அவர் உலகக் காரியங்களிலிருந்து துண்டிக்கப்பட்டார். யாரும் அவரைப் பார்க்க முடியாது; அவர் மறைக்கப்பட்டார். 28 லூத்தரன் (Lutheran) காலத்தின் மூலமாக, "நீதிமான் விசுவாசத்தினால் பிழைப்பான்," என்ற வெளிப் பிரகாரம் வெளிவந்தது. அதோடு மெத்தடிஸ்ட் (Methodist) காலம் வந்தது, பரிசுத்தமாக்கப்படும் காலம், அந்த காலத்தில் வந்த அதை கிருபையின் இரண்டாவது உறுதியான கிரியை என்று அவர்கள் அழைக்கிறார்கள். அங்கே பலிபீடக் காலம் இருக்கிறது. பின்பு கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவரின் மறுசீரமைப்பு, மறைக்கப்பட்ட ஜீவன். இதில்தான் பிரச்சனை இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் அதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்று சபைக்குள்ள பிரச்சனை எங்கே இருக்கிறது என்றால், இங்கிருந்து வருவது-பலிபீடத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே வேறுபாட்டைக் காண முடியவில்லை. அங்கேதான், சபை இருக்க வேண்டிய இடம் இருக்கிறது. ஆனால் அவர்களில் அநேகர் இன்னமும் வெளியே இருக்கிறார்கள்: இங்கே இருப்பதற்குப் பதிலாக அங்கே வெளியே இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு இருக்கும் இந்த நாட்களையும், நமக்கு இருக்கும் விசுவாசக் குறைபாட்டையும் நாம் கொண்டிருக்கிறோம், சபையானது அதன் கடைசி காலத்தில், அதன் கடைசி நியாயப்பிரமாண காலத்தில் இருக்க வேண்டும். நாம் காலத்தின் திருப்புமுனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். தேவன் உதவினால், நாளை இரவு நாம் தேவகுமாரனின் வருகையின் நிழல்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை, வேதாகமத்திலிருந்து வார்த்தைக்கு வார்த்தை நான் நிரூபிப்பேன், இப்போதே, இப்போதே. ஒரு சிறு சந்தேகமும் இல்லாமல் வேதவாக்கியம் அதை எப்படி நிரூபிக்கும் என்பதை மட்டும் கவனியுங்கள். நடந்துள்ள காரியங்கள் கூட நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதற்கான அறிவியல் பூர்வமான நிரூபணமாக இருக்கிறது, அது எந்த நேரமாக இருக்கலாம். ஆனால் இங்கே சபை இன்னும் வெளியே காலதாமதம் செய்துகொண்டிருக்கிறது. 29 இப்போது, ஏதோ தவறு இருக்கிறது. அது என்னவென்றால், இந்த உள்ளான இடத்தில், இந்தத் திரைக்குள், ஆரோன் சென்ற இடத்தின் பின்னால், அந்தத் திரை அவருக்குப் பின்னால் விழுந்தபோது, உள்ளே மன்னாவைக் கொண்ட ஒரு கலசம் இருந்தது, அது ஒரு பொற்கலசத்தில் வைக்கப்பட்டு, பெட்டியின் அருகே வைக்கப் பட்டிருந்தது என்பதையும் நாம் கவனிப்போம். இப்போது, அதே மன்னா தரையிலும் கிடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இந்தப் பெட்டி மனித இருதயத்தின் நிழலாக இருக்கிறது என்பதையும், இருதயம் திருக்குள்ளதாயிருக்கிறது என்பதையும் நாம் இப்போது காண்கிறோம். இங்குதான் இன்று மக்கள் தோற்றுப்போகிறார்கள், ஏனென்றால் அவர்கள் இருதயத்தின் மார்க்கத்திற்குப் பதிலாக தலையின் மார்க்கத்தைப் பெறுகிறார்கள். நான் முரட்டுத்தனமாகப் பேச விரும்பவில்லை, ஆனால் இதுதான் இன்று இந்தக் பெரிய மனிதர்கள், இங்கிருக்கும் மினியாபோலிஸைச் சேர்ந்த பில்லி கிரஹாம் (Billy Graham), மற்றும்-ஐச் சேர்ந்த ஜாக் ஷூலர் (Jack Shuler) மற்றும் தேவனின் ஊழியர்களாக இருந்து இன்று தேசங்களைக் கடந்து செல்லும் மற்ற பல பெரிய மனிதர்களுக்கும் காரணம்... ஆனால் மக்கள் மனந்திறக்கப்பட்டு, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு வரத் தொடங்கும்போது, நாம் அவர்களைக் கொண்டுவருவதற்கு உண்மையான ஜீவனுள்ள அக்கினிப்பிழம்பான ஒரு சபையைக் கொண்டிருக்க வேண்டும். 30 பில்லி கிரஹாமும் அந்த மனிதர்களும், நாம் சுமந்து செல்லும் செய்திக்கு, அல்லது அவர்கள் மிகுந்த ஏவுதலோடு சுமந்து செல்லும் செய்திக்கு, இந்த மணிநேரத்திற்கான தேவனின் மனிதர்கள் என்று நான் என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன். அவர்கள் அற்புதங்களைச் செய்வதில்லை. யோவான் இருந்ததைப்போலவே அவர்கள் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்னோடிகளாக இருந்தனர். யோவான் ஒருபோதும் அற்புதம் செய்யவில்லை, ஆனால் முழு தேசத்தையும் அசைத்த சுவிசேஷத்தை அவர் பிரசங்கித்தார். புரிகிறதா? ஆனால் அவர் ஒருபோதும் அற்புதங்களைச் செய்யவில்லை. ஆனால் இயேசு அவருக்குப் பின்னால் வந்தார், ஒரு பிரசங்கியாக மட்டும் அல்ல, மாறாக தேவனின் சர்வவல்லமை இன்னும் ஆளுகை செய்கிறது என்பதையும் அவர் ஜீவிக்கிறார் என்பதையும் நிரூபிக்க அற்புதங்களைச் செய்தவராக வந்தார். இன்று, என்ன பரிதாபம், மக்கள் தேவன் மீதான ஜீவனுள்ள உண்மையான விசுவாசத்திற்குப் பதிலாக, சுவிசேஷத்தைக் குறித்த ஒரு மனதின் கருத்தை, அல்லது ஒரு அறிவார்ந்த விசுவாசத்தை வைத்திருக்கிறார்கள். 31 அதிக காலத்திற்கு முன்பு இல்லை, நான் இப்போது வந்த நதியைக் கடந்த நகரமாகிய கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லில், அங்கு ஒரு பிரபலமான சபைக்குச் சென்ற ஒரு இளம்பெண் இருந்தாள். அவள் ஒரு நல்ல பெண், அவள் பியானோ வாசித்தாள். ஆனால் கிறிஸ்துவுடனான அவளுடைய மறுபடியும் பிறக்கும் அனுபவத்தைக் குறித்து நான் எப்போதும் சந்தேகித்தேன். ஆனால் அவளுக்குத் தெரிந்தவரை அவள் ஒரு நல்ல ஒழுக்கமான பெண்ணாக இருந்தாள். அங்கு அவள் பழகிய ஒரு பையன் இருந்தான், அவனுடைய முதல் பெயர் ஜான். அதனால் அவள் ஜானைத் திருமணம் செய்துகொண்டாள், அவர்கள்-அவள் தொடர்ந்து சென்றாள். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு ஜானின் வேலை அவனை வேறொரு நகரத்திற்கு அழைத்தது. அவன் அங்கே வெளியே இருந்தபோது, அவள் ஒரு சபையிலிருந்து மற்றொன்றுக்கு தன்னுடைய காகிதத்தை-கடிதத்தை மாற்றிக்கொண்டாள். ஆனால் இந்தச் சபை, மிகவும் ஆவிக்குரிய மனிதராகிய அவளுடைய மாமா போதகராக இருந்த சபையைப் போல ஆவிக்குரியதாக இல்லை. எனவே அவள் அங்குள்ள மற்ற பெண்களுடன் சேர்ந்து பொழுதை வீணடிக்க ஆரம்பித்தாள். இன்று நம் நாட்டில், நம் சபைகளில் உள்ள தவறு இதுதான், ஒருவரைப் பார்த்து மற்றொருவர் காப்பி அடிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலையை தொலைக் காட்சிகளிலும் அதுபோன்ற காரியங்களிலும் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் அவர்கள் பார்த்த சில அசுத்தமான காரியங்களைப் போல வேஷம்போட அல்லது காப்பி அடிக்க முயற்சிக்கிறார்கள், பின்னர் அதை ஜீவனுள்ள தேவனின் சபைக்குள் கொண்டு வருகிறார்கள். மேலும் பரிசுத்தமாக்கப்பட்ட பெண்களும் ஆண்களும் அதையே செய்கிறார்கள், அல்லது பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். 32 இதோ, நீங்கள் தொடர்ந்து செல்ல முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். எண்ணெயையும் தண்ணீரையும் உங்களால் கலக்க முடியாது; அது வேலை செய்யாது. நீங்கள் உலகத்தோடு கலந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் எப்படி இயற்கைக்கு அப்பாற்பட்டதை நம்பப் போகிறீர்கள், நீங்கள் எப்படி எதையாவது அடையப் போகிறீர்கள். வேதாகமம் கூறுகிறது, "நீங்கள் உலகத்தையாவது உலகத்திலுள்ளவைகளை யாவது சிநேகித்தால், பிதாவின் அன்பு உங்களுக்குள் இல்லவே இல்லை." ஆமென். இப்போது, அது கொஞ்சம் உரசலாம், ஆனால் அது உங்களுக்கு நன்மையைச் செய்யும். அதைப் பற்றிச் சிந்தியுங்கள். சகோதரனே, ஒரு நாள் நியாயத்தீர்ப்பில் நாம் கிறிஸ்துவைச் சந்திக்க வேண்டும். தேவன் சொன்னபடி சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்குப் பதிலாக, பிரசங்க பீடத்தின் பின்னால் நின்று கொண்டு, சிலரை முகஸ்துதி செய்யத் தன் செல்வாக்கைப் பயன்படுத்தும் மனிதனுக்கு ஐயோ. சத்தியம் சொல்லப்பட வேண்டும். இன்று நமக்குத் தேவையானது அதுதான், சத்தியம் அதனுடைய வெளிச்சத்தில் அதிகமாய் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். 33 ஆனால் இந்தப் பெண், அவள் தொடர்ந்து சென்றாள், அந்தச் சபையில் உள்ள பெண்கள் அனைவரும் வெளியே சென்று முற்றத்தைப் புல் வெட்ட, இந்தச் சிறிய பழைய மோசமான உடைகளை, குட்டைப் பாவாடைகளை அணிந்திருந்தார்கள். அவளும் அதைச் செய்ய ஆரம்பித்தாள். அவளுடைய அப்பாவும் மற்றவர்களும் அவளைக் கடிந்துகொண்டார்கள், ஆனால் அது எந்தப் பலனையும் அளிக்கவில்லை; அவள் மற்றவர்களைப் போலவே நன்றாக இருந்தாள். அவள் சொன்னாள், "என் சகோதரிகள் அதைச் செய்கிறார்கள், நான் ஏன் செய்யக்கூடாது?" சரி, உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், அவள் சிகரெட் பிடிப்பதைக் கண்டார்கள். மற்றவர்கள் அதைச் செய்தார்கள், அதனால் அவள் ஏன் செய்யக்கூடாது? பாருங்கள், அவள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை என்பதையே அந்த உண்மைகள் நிரூபிக்கின்றன, இல்லையென்றால் அவள் அப்படிச் செய்திருக்க மாட்டாள். அது உங்கள் உள்ளத்தின் ஆழத்திற்குச் செல்லும் என்று நம்புகிறேன். ஆனால் அது சரிதான். இப்போது நான்-கவனியுங்கள், வேதாகமம் கூறுகிறது, "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்." அதுதான் முழு விஷயமும். 34 நீங்கள் கவனித்தால், அவள் அப்போதே ஆரம்பித்தாள், அவள் ஒரு-ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தாள். சிறிது காலத்திற்குப் பிறகு உண்மையான அலை அலையான முடி கொண்ட ஒரு நயவஞ்சகனான இளைஞன் அந்தப் பகுதிக்கு குடிவந்தான். அவள் அவனைக் காதலித்தாள், அவனோ வேறொரு பெண்ணின் கணவன். முதல் விஷயமாக, அவர்கள் அங்கே திரும்பிப் போவார்கள், அவன் வரும்போதுதான் அவள் தன் சிறிய ஆடைகளை அணிந்துகொண்டு கொல்லைப்புறத்தில் புல் வெட்டுவாள். நீங்கள் எதற்காக அவற்றை அணிகிறீர்கள்? தேவனுக்கு முன்பாகக் காணப்படுவதற்காக அல்ல, ஆனால் மனிதர்களுக்கு முன்பாகக் காணப்படுவதற்காக. அவள் அங்கே முற்றத்தில் புல் வெட்டப் போனாள், முதல் விஷயமாக அது இரவில் வேலிக்குக் குறுக்கே ஒரு இனிய இரவு முத்தம் வரை சென்றது. சிறிது காலத்திற்குப் பிறகு அவள் தன் கணவனை விட்டுப் பிரிவதைக் கண்டாள்; அவள் இந்த மனிதனைத் திருமணம் செய்துகொண்டாள். 35 சரி, பொது அறிவு உள்ள எந்தவொரு பெண்ணும், அவன் ஒரு மனைவியை விட்டு ஓடிவிட்டால், இன்னொருத்தியையும் விட்டு ஓடிவிடுவான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே அடுத்த பெண் வந்தாள், அவன் இவளுடன் சிறிது காலம் வாழ்ந்த பிறகு, அவன் மற்றொருத்தியுடன் ஓடிவிட்டான், இவள் வேறொருவனைத் திருமணம் செய்துகொண்டாள். சரி, தொடர்ந்து, சபையில் அப்படியே பியானோ வாசித்துக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் அதைச் செய்தார்கள், அதனால் இவள் ஏன் செய்யக்கூடாது? அது அப்படியே தொடர்ந்து கொண்டே போனது. சிறிது காலத்திற்குப் பிறகு, இந்த மனிதன் அவளை விட்டுப் பிரிந்தான், அதனால் அவள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்யாமல் ஒருவனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினாள். இப்போது, அந்தப் பெண் சென்றாள்... அங்குள்ள போதகரான மனிதர் சென்று அவளிடம் பேசினார், அவள், "நான் நன்றாக இருக்கிறேன்," என்று சொன்னாள். பின்னர் அவளுடைய பாவங்கள் அவளைக் கண்டுபிடித்தன என்பதைத் தெரிந்துகொண்டாள். சிறிது காலத்திற்குப் பிறகு, அவள் சோர்ந்துபோனாள், அவளுக்குக் கீழ் வயிற்றில் வலிகள் வர ஆரம்பித்தன. அவள் மருத்துவரிடம் சென்றாள், அவர் அவளைப் பரிசோதித்தார், அவளது பெண் உறுப்பில் ஒரு வீரியமிக்க புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார், அது அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு மிகவும் முற்றியிருந்தது, "மரணத்திற்குத் தயாராகுங்கள், எதுவும் செய்ய முடியாது" என்று கூறினார். 36 அவள் ஒரு சிறந்த மருத்துவரிடம், ஒரு மருத்துவமனைக்குச் சென்றாள். அவர்களும் அதே காரியத்தைச் சொன்னார்கள், "நீங்கள் மரித்துக்கொண்டிருக்கிறீர்கள்." எனவே எங்கள் சபையில் இருந்த போதகர் இந்தப் பெண் இருந்த அதே சபைப்பிரிவைச் சேர்ந்தவராக இருந்தார், அதனால் அவர் அவளைப் பார்க்கச் சென்றார். அவர், "அவளை நான் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கச் செய்ய முடிந்தால், சகோதரர் பிரான்ஹமை அங்கே வரவழைத்து, அவளுக்காக ஜெபிக்கச் சொல்வேன்" என்று கூறினார். அவர் அவளைப் பார்க்கச் சென்றபோது, அவள்-அவள் தன் முழு பலத்தையும் கொண்டு அவரைக் கடுமையாகத் திட்டினாள். அவள் சொன்னாள், "நான் உனக்குப் புரியும்படி சொல்கிறேன், நான் உன்னை வரச்சொல்லிக் கூப்பிடவே இல்லை." மேலும் அவள், "நான் உன்னைப் போலவே நல்லவளாகத்தான் இருக்கிறேன்" என்றாள். அவர் சொன்னார், "அம்மா, அது அப்படி இல்லை." அடுத்தடுத்து சிகரெட் பிடித்துக்கொண்டே... அவர் சொன்னார், "நீங்கள் என்னிடம் சொல்ல வருகிறீர்களா, உங்கள் சபையை எனக்குத் தெரியும்." அவர் சொன்னார், "நானே ஆஸ்பரியிலிருந்து (Asbury) வந்தவன்தான்." "நாங்கள் இது போன்ற காரியங்களை நம்புவதில்லை" என்றார். அவள் சொன்னாள், "நான் இரட்சிக்கப்பட்டவள், உன்னைப் போலவே நானும் நல்லவளாகத்தான் இருக்கிறேன்." பாருங்கள், அது என்னவாக இருந்தது? அவள் தனக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தியிருந்தாள். வேதாகமம் கூறுகிறது, "பாவஞ்செய்கிற ஆத்துமாவே (அதாவது விசுவாசியாதிருக்கிற) சாகும்." அதன் அர்த்தம்... "மரணம்" என்றால் "பிரிவினை." நான் இப்போது இறந்தால் உங்களிடமிருந்து பிரிந்துவிடுவேன், ஆனால் தேவனிடமிருந்து அல்ல. நீங்கள் உங்கள் நண்பர்களிடமிருந்து பிரிந்துவிடுவீர்கள், ஆனால் நீங்கள் எப்போதும் தேவனின் சமூகத்தில் இருப்பீர்கள். பிரிவினை... அவளுடைய ஆத்துமா அவளை விட்டுப் பிரிந்துவிட்டது. 37 இப்போது, அப்படி ஒரு காரியம் இருக்கிறது... இருதயத்தில், ஆத்துமா இருதயத்தில் வாழ்கிறது, நீங்கள் உங்கள் இருதயத்திலிருந்து விசுவாசிக்கிறீர்கள். ஒரு புத்தக அறிவின் மூலமாக மக்கள் மார்க்கத்தைத் தங்கள் தலையில் பெறுவதில்லை; இருதயத்தில் ஏற்படும் ஒரு அனுபவத்தின் மூலமாகவே நீங்கள் மார்க்கத்தை இருதயத்தில் பெறுகிறீர்கள். இருதயம் எப்போதும் வேதாகமத்துடன் ஒத்துப்போகும், ஆனால் தலை தர்க்கம் பண்ணும். தர்க்கங்களை நாம் நிர்மூலமாக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் உங்கள் மனதுடன் செல்ல முடியாது; அது... பிசாசு அதில் வேலை செய்கிறான்; நீங்கள் உங்கள் இருதயத்துடன் செல்ல வேண்டும். எனவே அவளுடைய மனம் அவளிடம் சொல்லும், "இப்போது, இது நியாயமானதுதான், இந்தப் பெண்கள் அதைச் செய்ய முடியுமானால், நான் ஏன் செய்யக்கூடாது? அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்; அவர்கள் சபையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்; அவர்கள் சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள், அதனால் நான் ஏன் செய்யக்கூடாது? அவர்களைப் போல நானும் ஒரு கிறிஸ்தவள்தான், அவர்கள் அதைச் செய்ய முடியுமானால், நானும் அதைச் செய்வது நியாயமானதுதான், ஏனென்றால் நான் அவர்களில் ஒருத்தியாக இருப்பேன். நான் அப்படிச் செய்யாவிட்டால், நான் ஒரு பழைய பஞ்சாங்கம் என்று அவர்கள் நினைப்பார்கள், நான் இல்லை-நான் இதைச் செய்ய மாட்டேன், நான் அவர்களை விடச் சிறந்தவள்." பாருங்கள், அதுதான் தர்க்கம் பண்ணுவது. அது ஒவ்வொரு முறையும் உங்களை மோசமான நிலைக்குக் கொண்டுசெல்லும். உங்களின் அறிவார்ந்த அறிவு உங்களுக்கு என்ன சொன்னாலும், அது தேவனின் வார்த்தைக்கு முரணாக இருந்தால் அதை நீங்கள் நம்பாதீர்கள். முதலில் கர்த்தர் உரைக்கிறதாவது (THUS SAITH THE LORD) என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடனேயே உறுதியாக இருங்கள், என்னவாக இருந்தாலும்-உங்கள் ஆத்துமா எப்போதும் அந்த வார்த்தையுடன் ஒத்துப்போகும். அது சரிதான். 38 இந்தப் பிரசங்கிகளையும் அதுபோன்ற காரியங்களையும் நீங்கள் பார்த்து, அவர்கள், "அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன, இதெல்லாம் முட்டாள்தனம்" என்று சொல்லும்போது, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், அவருக்கு தேவனைத் தெரியாது; அது ஒரு உறுதியான காரியம். ஏனென்றால் தேவன் எப்போதும் தன்னுடைய சொந்த வார்த்தையுடன் ஒத்துப்போவார், நிச்சயமாக அவர் அப்படிச் செய்வார். அங்கே பரிசுத்த ஆவியானவர் இல்லை; அது முழுவதும் அறிவார்ந்தது மட்டுமே. அவர் ஒரு துப்பாக்கிக் குழாயைப் போல மெருகூட்டப்பட்டவராகவும் நேர்மையானவராகவும் இருக்கலாம், ஆனால் அது அவரை தேவனிடம் சரியானவராக ஆக்கிவிடாது. அது சரிதான். இன்னும் சில நிமிடங்களில் நாம் பேசப் போகிற இந்த இடத்திற்கு அவர்கள் ஒருபோதும் வந்ததில்லை. 39 ஆனால் பிறகு, அவளுடைய போதகர் அங்கே வந்தார். அவள் நன்றாக இருக்கிறாள் என்று அவர் நினைத்ததாகத் தெரிந்தது. அதனால் எங்கள் சகோதரர் அந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டுச் சென்றார். அவள் தான் சரியென்று நினைத்துக்கொண்டு, தொடர்ந்து சென்றாள்; அவளுக்கு ஒரு அறிவார்ந்த விசுவாசம் இருந்தது, அவள் சொன்னாள், "இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் நம்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே அவரை என் தனிப்பட்ட இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்." அவள் சொன்னாள், "நான் சபையில் வாசிக்கிறேன்; சமுதாயத்தில் எனக்கு எனக்கான இடங்கள் இருக்கின்றன, மற்ற எல்லாரையும் போலவே நானும் நல்லவளாகத்தான் இருக்கிறேன்." அங்கு என் போதகரான சகோதரர் கேட்டார், "சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்யாமல் இருக்கும் இந்தக் கணவனைப் பற்றி என்ன சொல்வது?" அவள் சொன்னாள், "நீ எந்தக் கதவின் வழியாக வந்தாயோ அதே கதவு திறந்திருக்கிறது." அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர், "நான் சகோதரர் பிரான்ஹமை இங்கே அழைத்து வர விரும்புகிறேன்" என்று சொல்லியிருந்தார். அவள், "நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை" என்று சொன்னாள். அதனால் அவர்-அவர் திரும்பிச் சென்றார், அவரால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். அந்தச் சகோதரர் என்னிடம், "அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், சகோதரர் பிரான்ஹம்?" என்று கேட்டார். நான் சொன்னேன், "முடிவில் அவளைக் கவனியுங்கள்; இங்கிருந்து அவள் செல்ல வேண்டிய நேரம் வரும்போது நீங்கள் அவளுக்கு அருகில் நிற்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்." 40 அவள் சில மாதங்கள் அப்படியே தொடர்ந்தாள், நிலைமை மோசமாகிக்கொண்டே இருந்தது. கடைசியாக அவர்கள் அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு நாள் அவர்கள் அனைவரும் அவளைச் சுற்றி நின்றுகொண்டிருந்தபோது, அவள் தேவனைச் சந்திக்கப் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது, திடீரென்று இந்த அறிவார்ந்த காரியங்கள் இங்கே உடையத் தொடங்கியபோது... நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மனம் உங்கள் மூளை, நரம்புகள் மற்றும் இரத்தத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த மனிதக் கூறுகள் எப்போதெல்லாம் செயல்படத் தவறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே இருக்கும் இந்த மூளை, அறிவார்ந்த காரியங்கள் உடையத் தொடங்குகின்றன. அது உடையத் தொடங்கியபோது, பாவம் செய்த, விசுவாசியாத, மற்றும் ஒரு பக்கமாகத் தூக்கி எறியப்பட்ட இந்த ஆத்துமா, அவளைத் தொடர ஆரம்பித்ததை அவள் உணர்ந்தாள். அது மேலே வருவதை அவள் பார்த்தபோது, அவள், "ஓ, நான் கெட்டுப்போனேன்," என்று சொன்னாள். போதகர் சொன்னார், "இப்போது இங்கே பாருங்கள், இங்கே பாருங்கள், நீங்கள் உங்களையே இழந்து கொண்டிருக்கிறீர்கள்." அவள் சொன்னாள், "நீ என்னிடம் பேசாதே; நீ கெட்டுப்போனவன்." அவள் சொன்னாள், "நான் கெட்டுப்போனேன்" 41 அவர்கள் சென்று மருத்துவரை அழைத்துவந்து, "அவள் தன் சுயநினைவில் இல்லை; அவளுக்கு ஒரு ஊசி போடுங்கள்" என்றார்கள். அவர்கள் ஒரு ஊசியைப் போட்டார்கள், அல்லது அவள் தொடர்ந்து, "நான் தொலைந்துபோனேன். நான் தொலைந்துபோனேன். நான் நரகத்திற்குப் போகிறேன்," என்று அலறிக்கொண்டே இருந்தாள். அதற்கு அவர்கள், "அவளுக்கு இன்னொன்று போடுங்கள்," என்றார்கள். மேலும், இறுதியாக அவளது மூச்சு அடங்கும் வரை, "நான் தொலைந்துபோனேன். நான் தொலைந்துபோனேன்" என்று அவள் அலறிக்கொண்டிருக்க, அவர்கள் அவளுக்கு ஊசிகளைப் போட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த ஊசி இந்த உதடுகளிலிருந்து வந்த அந்த அறிக்கையை நிறுத்தியது, அப்போது அறிவு மழுங்கிக்கொண்டிருந்தது, ஆனால் தேவனுக்கு முன்பாகப் பாவம் செய்த அந்த ஆத்துமா, இனிவரும் எல்லா யுகங்கள் முழுவதிலும் அதனுடனே வாழ வேண்டியதாய் இருக்கும். 42 பலவிதமான உபதேசக் காற்றினால் அலைக்கழிக்கப்பட வேண்டாம்; தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள். நிலையாய் இருங்கள். ஆயத்தமாகுங்கள். "சகோதரர் பிரன்ஹாம், அதை எப்படிச் செய்வது?" இதோ இருக்கிறது. அங்கே அநேக... பழைய ஏற்பாட்டில் அங்கே, வெளிப்பிரகாரங்களில், மன்னா தரையில் விழுந்ததை நினைத்துக்கொள்ளுங்கள். அதில் விஷயம் என்னவென்றால், ஒரு பொன் ஓமரைக் கையிலெடுத்து, அதை மன்னா முழுவதுமாய் நிரப்பி, அதைப் பரிசுத்த ஸ்தலத்திற்குப் பின்னால் உடன்படிக்கைப் பெட்டியின் அருகே வைக்கும்படி தேவன் மோசேயிடம் சொன்னார். அது வருஷந்தோறும், தொடர்ந்து புதிதாகவே இருந்தது. ஆனால் தரையில் விழுந்ததோ, வாடிப்போனது. மக்கள் சென்று அதை எடுத்துக்கொள்வார்கள், மேலும் அதைச் சாப்பிடுவார்கள். ஆனால் அந்த நாள் கடந்துபோவதற்கு முன்பாகவே, அவர்களில் அநேகர் சோர்வடைந்ததை அவர்கள் கண்டுகொண்டார்கள். அவர்களில் அநேகருக்கு மீண்டும் பசியெடுக்கும். ஏனென்றால் அந்த மன்னா குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீடித்தது. 43 இந்த நாட்களில் மக்கள்... அதை நான் எத்தனை முறை காண்கிறேன். அந்த மன்னா எதற்கடையாளமாக இருக்கிறது? இப்போது, நான் சற்று அழுத்தமாகச் சொல்லப் போகிறேன், நீங்களும் என்னை அப்படியே நேசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் உங்களுக்கு ஒன்றை உணர்த்தவே நான் முயற்சிக்கிறேன்; நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். கவனியுங்கள், அந்த மன்னா பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளமாக இருந்தது. தேவன் முழு பயணத்திற்கும் மன்னாவை வழங்கினார், கிறிஸ்துவுடன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, உலகத்திற்கு ஜீவனை உண்டாக்கும்படி பரலோகத்திலிருந்து இறங்கி வந்து மரித்ததற்கு. மேலும் அது-தேன், சிறிய தேன்கூடுகளைப் போலவே அது இருந்தது. அது பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கும்; அவர்கள் அதை எடுத்து அதிலிருந்து அப்பம் செய்தார்கள். ஆனால் அந்த அப்பம் குறிப்பிட்ட நேரம் மட்டுமே நீடித்தது. மேலும் பகலில் வெயில் ஏறிய பின்பு, சூரியன் உதித்தபோது, அது அழிந்துபோனது. ஆனால் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்ததோ அழிந்துபோகவில்லை. அது எந்நேரமும் நன்றாயிருந்தது. 44 நினைவில் கொள்ளுங்கள், இன்று அநேகர், தாங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருப்பதாகக் கூறுகி றார்கள், அது அவர்களிடம் இருக்கிறது... ஆனால் நீங்கள் உங்களை எங்கே வைக்கிறீர்கள் என்கிற உங்கள் ஸ்தானமே அது. அதனால் தான் உங்களுக்கு ஆவிக்குரிய ஆகாரப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அது உண்மைதான். அநேகரை, நீங்கள் காண்பீர்கள்... இங்கே வெளியில் இருக்கிற ஒரு மனிதன், நீதிமானாக்கப்பட்டு, உள்ளே வந்து கர்த்தருக்குள் விசுவாசிக்கிறான். நிச்சயம். எந்தவொரு மனிதனுக்கும் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே உணர்த்துதலைக் கொண்டுவர முடியும். நீதிமானாக்குதல் என்பது பரிசுத்த ஆவியானவரின் செயல். ஆனால் அது நீங்கள் எங்கே சாப்பிடுகிறீர்கள், எங்கிருந்து உங்கள் விநியோகத்தைப் பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இன்றைய மக்கள், மறுபிறப்படைந்தவர்கள் கூட, பலமுறை, தேவனிடம் செல்கிறார்கள், அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள், தேவனைத் துதிக்கிறார்கள், ஆராதனைக்குச் செல்கிறார்கள், ஆராதனையை மகிழ்ந்து அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆராதனையை விட்டு வெளியே வந்ததும், மறுநாள் காலையில், அந்த இரவில் உள்ளே சென்றபோது இருந்தபடியே ஒல்லியாக இருக்கிறார்கள். 45 அநேகர் தெய்வீக சுகமளித்தலின் சொந்த அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள், வந்து பரிசுத்த ஆவியானவர் அசைவாடி அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வதைப் பார்க்கிறார்கள். அவர்கள் அங்கே அமர்ந்து அதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள், தேவனுடைய நன்மையானவைகளைச் சாப்பிடுகிறார்கள். ஆனால் மறுநாள் காலையில் சில அதிகாரிகளின் அல்லது வேறெவரு டையவோ முன்னிலையில், அதன் இருப்பையே அவர்கள் மறுதலிப்பார்கள். அதைக் குறித்துச் சாட்சி சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வாழும் இடம் அப்படி; அங்கே தான் அவர்கள் தங்களுடைய மன்னாவைச் சாப்பிடுகிறார்கள். 46 இப்போது, அவர் நமக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுப்பார் என்று வேதாகமம் சொல்கிறது. மேலும் அவர் நமக்கு ஒரு புதிய ஆவியைக் கொடுப்பார். அதில் பெந்தெகொஸ்தே மக்கள், முழு சுவிசேஷ மக்கள் உட்பட அநேகர் ஏமாற்றப் பட்டிருக்கிறார்கள். பலமுறை தேவன், "நான் உங்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன்" என்றார். அது அவருடைய ஆவியல்ல; அது உங்கள் ஆவி. பின்பு நான் என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன். நான் உங்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன், அதன் பின்பு நான் என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன். அநேக நேரங்களில் நீங்கள் புதிய ஆவியைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். உணர்ச்சிகள், அடையாளங்கள் மற்றும் காரியங்கள் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கை அதற்கு ஏற்றாற்போல் இருப்பதில்லை. இப்போது, இது கொஞ்சம் கடுமையாக இருக்கலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இதுதான் சத்தியம். 47 அநேகர்-அந்த ஆவி, அந்தப் புதிய ஆவி, தம்முடைய ஆவியுடன் ஒன்றிணை வதற்காக தேவன் உங்களுக்குப் புதிய ஆவியைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆம், சிலர் மிகவும் மோசமானவர்கள், அவர்கள் தங்களோடு தாங்களே ஒத்துப்போக முடியாது, அப்படியிருக்க தேவன் உள்ளே வந்தால் அவரோடு எப்படி ஒத்துப்போவார்கள். அது உண்மைதான். மிகவும் சந்தேகத்துடனும், ஏற்ற இறக்கத்துடனும் இருப்பார்கள். அது வரும்போது நீங்கள் அவருடைய ஆவியோடு ஒன்றிணைந்து செல்லும்படி தேவன் உங்களுக்குப் புதிய ஆவியைக் கொடுக்க வேண்டும், புதிய சுபாவத்தைக் கொடுக்க வேண்டும். ஆமென், நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். தேவன் உங்களுக்கென்று ஒரு புதிய ஆவியைக் கொடுக்கிறார், பின்பு உங்களுடனே வாசம்பண்ணவும் உங்களுடனே தங்கவும் தம்முடைய பரிசுத்த ஆவியை அதற்குள் (ஆமென்) வைக்கிறார். 48 கவனியுங்கள், பிரகாரங்களில் வெளியே சாப்பிடப்பட்ட அதே மன்னாதான் உள்ளேயும்-மகா பரிசுத்த ஸ்தலத்திலும் சாப்பிடப்பட்டது. ஆனால் இங்கே வெளியே இருந்த இந்த மன்னா சீக்கிரம் தீர்ந்துபோனது. வெளியே சாப்பிட்டுவிட்டு, "அப்படியானால், சகோதரர் பிரன்ஹாம், எனக்கும் அதே காரியம் இருந்தது; அவர்கள் செய்ததைப்போலவே நானும் இதைச் செய்தேன், அதைச் செய்தேன்" என்று சொல்கிற அப்படிப்பட்ட மக்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். "ஆனால் நான் அந்தப் பெண்ணைச் சந்தித்திருக்கிறேன்; அவள் எப்போதுமே வீட்டு மாடியில் இருக்கிறாள். அவள் மனதில் ஒருபோதும் கவலையில்லை. நான் அந்த மனிதனைச் சந்திக்கிறேன்; அவர் எங்கிருந்தாலும் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்கிறார், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்றால் 'அற்புதம்' என்கிறார். ஒவ்வொரு முறை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போதும், பிரசங்கியார் வந்து அவருக்காக ஜெபிக்கிறார், சகோதரரே, மறுநாளே அவர் எழுந்து சென்றுவிடுகிறார், அவர் மிகவும் அற்புதமாக இருக்கிறார். என்னால் மட்டும் எப்படியோ என்னுடைய ஆசீர்வாதத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை." அது நீங்கள் தங்கியிருக்கும் இடம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதே அது. ஓ, நான்-நீங்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள், அது ஒரு-பல நேரங்களில், முகாமிடும் இடங்களில், இந்த ஆசீர்வாதங்கள் தீர்ந்துபோகின்றன. நீங்கள் மன்னாவைச் சாப்பிடுகிறீர்கள், சரியான மன்னாவை, ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கவில்லை, ஆரோனைப் போல, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குப் பின்னால் உள்ள அந்த இடத்திற்குள் செல்லவில்லை. அவர் அங்கே இருந்தபோது, வேறொன்றுமில்லை, அவர் உலகத்தின் சத்தத்தை இனிக் கேட்கவேயில்லை. 49 இன்றைக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையானது என்னவென்றால், நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்பட்ட பின்பு, ஒரு மறைவான வாழ்க்கை தேவை. கிறிஸ்துவுடன் இணையும் ஆண்களும் பெண்களும், அதைச் சுற்றிலும் திரைகள் விழும்போது, நீங்கள்... உலகம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. அங்கே நீங்கள் கிறிஸ்துவோடு வாழ்கிறீர்கள், எங்கே மன்னாவோ; அங்கே பொன் பானையிலுள்ள மன்னாவிலிருந்து நீங்கள் ஒவ்வொரு நாளும், இரவும் பகலும் எல்லா நேரமும் சாப்பிடுகிறீர்கள்: மேகமில்லாத வானத்தின் கீழே, மலையின் மேல் வாழ்கிறீர்கள். ஆரோன் அதற்குள் நடந்து சென்றபோது திரைகள் அவருக்குப் பின்னால் விழுந்தன, அவர் தேவனுடன் மட்டுமே தனியாக ஒரு இடத்தில் முற்றிலும் சூழப்பட்டிருந்தார். அல்லேலூயா. உலகத்தாரை தங்களைச் சுற்றிலும் இருந்து துண்டித்துவிட்டு, தேவனுடைய சமுகத்தில், மறுபடியும் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இன்று நிலைத்திருக்க வேண்டிய இடம் அதுவே. அல்லேலூயா. 50 சபைக்கு இன்று தேவையானது அதுவே, ஒரு மறைவான அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை. உலகத்தோடு வீணாய்ப் பொழுதுபோக்கிக் கொண்டும், அவர்களைப் போலப் பாசாங்கு செய்துகொண்டும், நடித்துக்கொண்டும், கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் உலகத்தின்படி உங்களை அமைத்துக்கொள்ளப் பார்க்கிறீர்கள். நீங்கள் அடுத்த சபையைப் போல வாழ முயற்சிக்கிறீர்கள். ஒரு சிறந்த ஸ்தாபனத்தில் சேரவும், சிறந்த ஆடைகளை அணியவும், அப்படி இப்படிச் செய்யவும் நீங்கள் முயற்சிக்கிறீர்கள். அது கிறிஸ்தவத்திற்கு ஏற்புடையதல்ல. கிறிஸ்தவம் என்பது ஒரு பலியிடப்பட்ட வாழ்க்கை, பரிசுத்த ஆவியானவரால் முத்திரையிடப்பட்டு, கிறிஸ்துவின் மூலமாய் தேவனுக்குள் மறைந்திருக்கும் வாழ்க்கை. ஆமென். உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதைக் கொண்டது: இதை உங்களால் எவ்வளவு நன்றாகச் செய்ய முடியும் என்பதல்ல, அல்லது நீங்கள் எவ்வளவு நன்றாகப் பாட முடியும் என்பதல்ல, அதெல்லாம் சரிதான், எவ்வளவு நன்றாகப் பிரசங்கிக்க முடியும் என்பதல்ல, அது நல்லதுதான். ஆனால் அதுவல்ல. அது ஒரு மறைவான வாழ்க்கை, அர்ப்பணிக்கப்பட்ட, திரை, உங்களுக்கிடையே திரை விடப்பட்டு, நீங்கள் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, கிறிஸ்துவின் மூலமாக தேவனுக்குள் மறைந்திருந்து, பரிசுத்த ஆவியானவரால் அங்கே முத்திரையிடப்பட்டிருப்பதாகும். ஆமென். 51 பிசாசானவனால் உங்களை நெருங்க முடியாது. அவனால் அதைச் செய்ய முடியாது; நீங்கள் வந்த அதே செயல்முறையின் வழியாகத்தான் அவனும் வர வேண்டும். அப்படி அவன் செய்தால் அவன் உங்கள் சகோதரனாகிவிடுவான். ஆகையால் அவனால் உங்களை நெருங்க முடியாது. ஆமென். அவனால் அதன் வழியாக வர முடியாது. "ஓ," ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள், "சகோதரர் பிரன்ஹாம், நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன்." ஆம், நீங்கள்-"நான் தேவனுடைய நன்மையான காரியங்களைச் சாப்பிடுகிறேன்." ஆம், ஆனால் நீங்கள் அங்கே வெளியே பிரகாரங்களில் இருக்கிறீர்கள். அதனால் தான் அது நிலைத்திருப்பதில்லை. அதனால்தான் இந்த வருடம் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள், அடுத்த வருடம் நீங்கள் திரும்பவும் உலகத்திற்குப் போய்விடுகிறீர்கள். இந்த-இந்த எழுப்புதல் நடக்கும்போது நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். எழுப்புதல் முடிந்ததும், நீங்கள் வேறு எங்கோ சென்று உலகத்தோடு இணைந்துவிடுகிறீர்கள். நீங்கள் சொல்கிறீர்கள், "ஓ, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன்; நான் அந்நிய பாஷை பேசினேன்; நான் சத்தமிட்டேன்." அதெல்லாம் சரிதான், அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அது ஏன் நிலைப்பதில்லை? அதுதான் விஷயம். அதைத்தான் உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதைத்தான் மக்களும் சொல்லிக் கொண்டிருக்கி றார்கள்: நீங்கள் இந்த மாபெரும் உன்னத அழைப்பை அறிக்கையிடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஏன் அதற்கேற்றபடி வாழவில்லை? 52 உங்களுக்குத் தெரியும் ஒரு பிரசங்கத்தைப் பண்ணுவதை விட அதை வாழ்ந்துகாட்டுவதே சிறந்த காரியம் என்று, அது உங்களுக்குத் தெரியும். நீங்கள் எழுதப்பட்ட நிருபங்கள். மேலும் அதை உங்கள் சுயத்தினால் செய்ய முடியாது; கொஞ்சக் காலத்திற்கு நீங்கள் அப்படிப் பாசாங்கு செய்யலாம், ஆனால் உங்கள் பாவங்கள் உங்களைக் கண்டுபிடித்துவிடும். நீங்கள் உங்களை தேவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, உள்ளே சென்று, உங்களுக்குப் பின்னால் கதவுகளை அடைத்துவிட்டு, உங்களுக்குப் பின்னாலுள்ள ஒவ்வொரு தடையையும், ஒவ்வொரு பாலத்தையும் சுட்டெரித்துவிட்டு, புறப்பட்டுச் செல்வதே நல்லது. ஆமென். எனக்குத் தெரியும் இதுவே சத்தியம் என்று; இது பலனளிக்கும் என்று எனக்குத் தெரியும். அது மட்டும் இல்லையென்றால், எனக்கு என்னவாகியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. அது உண்மைதான். ஆனால் அது-அப்போது நீங்கள் பார்ப்பது மக்களை அல்ல, அது கிறிஸ்துவே. 53 கவனியுங்கள், அதே இடத்தில், அவர்கள் ஆரோனின் கோலைக் கொண்டுவந்தார்கள். அங்கே ஒரு நாள் இரவு அதை வைத்தார்கள். சிந்தித்துப் பாருங்கள், அதே கோல், அது என்ன செய்தது? அது துளிர்த்து; அதே இரவில் பூத்து வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. அது என்னவாக இருந்தது? அது ஒரு வாதுமை மரமாக இருந்திருக்க வேண்டும், அப்போது அந்த தடி அல்லது கோல், ஒரு வாதுமை மரத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும். இன்றிரவு இங்கேயே மினியாபோலிஸில் பல வாதுமை மரங்களும், கோல்களும் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு காரியம் என்னவென்றால், நீங்கள்-இந்த மறைவான வாழ்க்கைக்கு வெளியே நீங்கள் இருக்கும் வரையிலும், தேவனுடைய சமுகத்திற்குள் நீங்கள் வரும் வரையிலும், தேவன் நீங்கள் செய்யும்படி குறித்திருக்கிற அந்தப் பலன்களைக் கொடுக்கவும், புத்துணர்வு பெறவும் உங்களால் ஒருபோதும் முடியாது. 54 அதன் துளிர்த்தலைப் பாருங்கள். முதலில் நாம் கண்டறிவது... எது மரங்களைத் துளிர்க்கச் செய்கிறது? அது ஒரு புத்துணர்ச்சி. எது புத்துணர்ச்சியைத் தருகிறது? அதிகாலையில், நீங்கள் அதிகாலையில் வெளியே செல்லும்போது அதைக் காண்பீர்கள், இரவுக்குப் பிறகு எல்லாம் அமைதியாகி விடுகிறது, அதன் பின்பு பனி விழுகிறது, அது ஒரு-ஒரு புத்துணர்ச்சியைக் கொண்டுவருகிறது. இன்று இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், மக்கள் தேவனுக்கு முன்பாக வந்து அமைதியாக இருக்க நேரமில்லை. அவர்கள் செய்வதற்கு அநேக காரியங்கள் இருக்கின்றன. அவர்கள் இதைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் இதைச் செய்ய வேண்டும்; அவர்களுக்கு இது வேண்டும்; அவர்கள் அங்கே போக வேண்டும். உங்களுக்கு-உங்களுக்கு நேரமில்லை. பிசாசு உங்கள் நேரம் முழுவதையும் எடுத்துக்கொண்டான். தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்க, சாந்தமாக இருக்க உங்களுக்கு நேரமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நினைவில் கொள்ளுங்கள்... நீங்கள் ஒரு இயற்கை, மேலும் இயற்கை முழுவதும் அமைதியாகவும் நிசப்தமாகவும் மாறிய பிறகு, பனி விழத் தொடங்குகிறது, அது புத்துணர்ச்சியளித்து ஜீவனைக் கொண்டுவருகிறது. நீங்களும் ஒரு இயற்கைதான். நீங்கள் தேவனுக்கு முன்பாக அமைதியாகவும் நிசப்தமாகவும் மாறும்போது, பரலோகத்தின் பனி விழத் தொடங்கிப் புத்துணர்ச்சியளிக்கத் தொடங்குகிறது. 55 இரவு கடந்த பிறகு, காலையில், அதிகாலையில் நீங்கள் எப்போதாவது வெளியே சென்றிருக்கிறீர்களா? அது நறுமணத்தைக் கொடுக்கவும் மலருகிறது. அதிகாலையில் அதன் நறுமணத்தை அறிந்துகொள்ள நீங்கள் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? அதிகாலையில் நீங்கள் வெளியே செல்லும்போது அதைக் காண்பீர்கள், பனி கீழே படர்ந்திருக்கிறது, மரங்கள் துளிர்க்கின்றன, பூக்கள் மலருகின்றன, அதன் வாசனை... ரோஜாத் தோட்டத்திற்குள், சாலையில் நடந்துசென்று அந்த ஹனிசக்கிள் மலர்களின் நறுமணத்தை அதிகாலையில் முகர்ந்து பாருங்கள். அது ஏனென்றால், இரவு முழுவதும் இயற்கை அமைதியாக இருந்துள்ளது. அது அமைதியானபோது தேவன் அதைப் புத்துணர்ச்சியினால் நீராட்டினார். அதைத்தான் நீங்களும் செய்ய வேண்டும், விலகிச்சென்று தேவனுக்கு முன்பாக அமைதியாக இருங்கள், அப்போது அவர் பரலோகத்தின் புத்துணர்ச்சியினால் உங்களை நீராட்ட முடியும். ஆமென். நீங்களாகவே தனித்துச் செல்லுங்கள்; கதவுகளை மூடி, அவைகளைச் சாத்திவிட்டு, "இப்போது ஆண்டவரே, உம்முடைய சமுகத்தில் இதோ நான் இருக்கிறேன்" என்று சொல்லுங்கள். 56 கவனியுங்கள், அது புத்துணர்ச்சி பெற்ற பிறகு, அது பலன் கொடுத்த பிறகு, இந்தப் பூக்களும் கனியைக் கொடுத்தன. பல வருடங்களாகக் கிறிஸ்தவர்களாக இருந்தும், ஒருபோதும் மற்றொரு ஆத்துமாவைக் கிறிஸ்துவுக்காக ஆதாயம் செய்யாத அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் சபையிலோ அல்லது மக்களுக்கு முன்பாகவோ, அல்லது வீதிகளிலோ தங்கள் இரட்சிப்பைக்குறித்து ஒருபோதும் பொதுவான சாட்சி கொடுத்ததில்லை; அவர்கள் தங்களது வேலையிலோ அல்லது வேறு எங்கேயோ ஒரு பாவிக்கோ, ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஒருபோதும் சாட்சி சொன்னதில்லை. அவர்களால் பலன் கொடுக்க முடியவில்லை, ஏன்? அவர்களால் போதுமான நேரம் அமைதியாக இருக்க முடியவில்லை. நீங்கள் செய்வதற்குப் பல காரியங்கள் உள்ளன. 57 சற்று காலத்திற்கு முன்பு இங்கே உங்கள் அண்டை மாநிலத்தில் உள்ள உங்கள் பக்கத்து-ஒரு மனிதரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், "அப்படியென்றால்," அவர் சொன்னார், "போதகர் பிரன்ஹாம், நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்," அவர் சொன்னார், "நாங்கள், என் மக்கள் பல வருடங்களுக்கு முன்பே இங்கே குடியேறிவிட்டார்கள்." "நாங்கள் அனைவரும் பன்றி வளர்ப்பவர்கள்" என்றார். அவர் சொன்னார், "நான்... என் தாத்தா இந்தப் பன்றி மந்தையை வளர்த்து என் தந்தையைப் படிக்க வைத்தார். அதன் பின்பு என் தந்தை இறந்தபோது, அவர்-நாங்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டோம், என்னிடம்-பன்றிகள் உள்ளன, நான் என் குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன்..." என்பது போல சொல்லிக்கொண்டே போனார். பன்றிகள், பன்றிகள் என்பதை மட்டுமே என்னால் கேட்க முடிந்தது. அதற்கு நான், "அது நல்லது, நண்பரே..." என்றேன், "நான் பாராட்டுகிறேன்..." என்றேன். அவர் சொன்னார், "இந்த பன்றிகளின் மூலமாகத்தான் நாங்கள் எங்கள் பில்கள் அனைத்தையும் செலுத்துகிறோம். நாங்கள் தொடர்ந்து இன்னும் நிறைய பன்றிகளைக் கொண்டுவந்து அவற்றை விற்று, மேலும் கொண்டுவருகிறோம். சிறியவைகளை வைத்துக்கொண்டு..." நான் சொன்னேன், "அது நல்லதுதான், ஆனால் பன்றிகளை வளர்ப்பதைத் தவிர வேறு எதற்காகவாவது தேவன் உங்களை இங்கே வைத்திருக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது நின்று சிந்தித்ததுண்டா? அது எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், தேவன் உங்களை இங்கே தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் இருக்கும்படியே வைத்தார், பன்றிகளை வளர்க்க மட்டுமல்லை." 58 ஒரு தொழிற்சாலையில் வேலை செய்ய மட்டுமே தேவன் உங்களை இங்கே வைக்கவில்லை; இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடிருந்து அரசாளுகிறார் என்பதை மனிதர்கள் அறிந்துகொள்ளும்படியாக, கௌரவமான மற்றும் ஒழுங்கான வாழ்க்கையையும், தேவனுக்குள் மறைவான அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் வாழும்படி, சகல மனுஷராலும் வாசிக்கப்படும் எழுதப்பட்ட நிருபமாக, ஒரு சாட்சியாக அவர் உங்களை இங்கே வைத்தார். ஆமென். அது கொஞ்சம் குத்துகிறாற்போல் இருக்கலாம், ஆனால் அது நல்லது. உணவைச் சரியாக எடுத்துக்கொள்ள, உங்களுடைய செரிமான அமைப்புகளுக்கு அது உதவும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆமென். ஆத்துமா மற்றும் சரீரம் இரண்டிற்கும் நீங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அந்த இடத்திற்குள் அது உங்களைப் பொருத்தும். 59 கவனியுங்கள், அங்கே வேறு ஒன்றும் இருந்தது, அதைப் பார்க்க நீங்கள் இதற்குள் உற்றுநோக்க வேண்டும். அவருடைய கோலுக்குப் பிறகு, அது எவ்வாறு பூத்தது, அங்கே இருந்த அதே மன்னாவின் அருகே பிரகாரத்தில் இருந்த வெறும் கோலான இந்தப் பழைய செத்த தடியை தேவன் அங்கே எவ்வாறு நிரூபித்தார் பாருங்கள். ஆனால் அது இங்கே உள்ளே வந்து இருபத்தி நான்கு மணிநேரம் தங்கியிருந்தபோது, அது அந்தப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே வந்தபோது பலன் கொடுக்கிற ஒரு மரமாக, பலன்களைக் கொடுப்பதாக இருந்தது. சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதைச் சொல்லுகிறேன்: நீங்கள் ஒருபோதும் அந்த இடத்தில் இருந்ததில்லை என்றால், இன்றிரவு அவரிடம் வாருங்கள். அந்த இடத்திற்குள் செல்லுங்கள். நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, கதவை மூடுங்கள், நாளை வரை உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உங்கள் கணவரிடம் சொல்லுங்கள். அங்கேயே இருங்கள். உங்கள் மனைவியிடமும் அதையே சொல்லுங்கள், "நான் காலையில் இங்கிருந்து வெளியே வரவில்லை என்றால், இன்று நான் வேலைக்கு வரவில்லை என்று முதலாளியிடம் சொல்லிவிடு" என்று சொல்லுங்கள். உங்கள் ஆத்துமாவில் ஏதோ ஒன்று நடக்கும் வரை கிறிஸ்துவின் சமுகத்தில் தங்கியிருங்கள். அதுதான் விஷயம். இந்த ஏற்ற இறக்கமான அனுபவங்கள் உங்களுக்கு இருக்காது. 60 ஏன்? அங்கே வெளியே அவர்கள் மன்னாவைச் சாப்பிடுவார்கள், ஆனால் பத்து மணி ஆவதற்கு முன்பாகவே அவர்களுக்குப் பசியெடுக்கும். ஏனென்றால் அது உருகிப்போனது, சூரியன் அதை உருக்கியது, அது மறைந்துபோனது. ஆனால் இங்கே இருந்த இந்த மக்கள், ஆரோன் உள்ளே பரிசுத்த ஸ்தலத்தில், நாம் இப்போது தேவனுடைய ஆசாரியர்களாக இருக்கிறோம். அவர் அங்கே அமர்ந்துகொண்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், வருடம் முழுவதும், பல வருடங்களாக மன்னாவைச் சாப்பிட முடிந்தது; அது ஒருபோதும், ஒருபோதும் கெட்டுப்போகாது. நாள் முழுவதும் அவர் அந்த மன்னாவிலிருந்து சாப்பிடுகிறார். தங்களை அர்ப்பணித்து, உலகத்தின் காரியங்களை விட்டுவிட்டு, தங்கள் வாழ்க்கையை முழுமையாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கிற ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, இரவும் பகலும் மன்னாவிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். வெளியே புயல்கள் வீசிக்கொண்டிருந்தாலும் அல்லது என்ன நடந்தாலும் அவர் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறார். ஆமென். வீட்டில் வியாதி வந்தாலும், அல்லது எல்லையில் பிரச்சனை இருந்தாலும், அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை, அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் மறைந்திருக்கிறார். 61 விசுவாசியின் மற்றொரு காரியத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதே மன்னாதான். கவனித்துப் பாருங்கள், வெளியே பிரகாரங்களில், அவர்கள் வெளிச்சத்தில்தான் நடந்து கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்களுடைய வெளிச்சம் சூரிய வெளிச்சம், நட்சத்திர வெளிச்சம் அல்லது நிலவின் வெளிச்சமாக இருந்தது. மேகமூட்டமான நாட்கள் அவர்களைத் தொந்தரவு செய்தன, அவர்களுக்கு நடப்பதற்கு எந்த வெளிச்சமும் இருக்கவில்லை. இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் வராதபோது, காரிருளாக இருந்தது, எனவே நடப்பதற்கு அவர்களுக்கு வெளிச்சம் இல்லை. அவர்கள் அங்கே வாழ்கிறார்கள்... அது அங்கே வெளியே வாழும் மக்கள். ஆனாலும் அவர்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள். இன்றிரவு நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இங்கே அமர்ந்திருக்கிற மக்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள், அவர்கள் அங்கே வெளியே அந்தப் பிரகாரங்களில் வாழ்கிறார்கள், ஓ, அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள், சத்தமிடுகிறார்கள், நல்ல நேரத்தைக் கொண்டிருக்கிறார்கள், மன்னாவைச் சாப்பிடு கிறார்கள். ஆனால் ஒரு வேளை உணவு தவறினாலும் சில நாட்களிலேயே அவர்களுக்கு வயிற்றுவலி வந்துவிடும். இதெல்லாம் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. "என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, சகோதரர் பிரன்ஹாம், என்ன பிரச்சினை என்றே எனக்குத் தெரியவில்லை" என்பார்கள். சரி, இன்னும் கொஞ்சம் நெருங்கி வாருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். "நான் சகோதரர் பீட்டர்சனைப் போல வாழ விரும்புகிறேன், அல்லது உங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வேறொருவரைப் போல வாழ விரும்புகிறேன். ஓ, அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறார்கள்; என்ன வந்தாலும் போனாலும், அவர்கள் எப்போதும் தேவனுக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னாலும் அப்படிச் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்," என்று நீங்கள் சொல்லலாம். உங்களால் முடியும். நீங்களும் அதே கூட்டத்தில்தான் இருக்கிறீர்கள்; அதே பயணத்தில்தான் இருக்கிறீர்கள். தேவன், தம்முடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவின் மூலமாக உங்களை இரட்சித்திருக்கிறார். ஆனால் நீங்கள் அவரிடம் இன்னும் கொஞ்சம் நெருங்கி வர வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும். 62 இப்போது, நாம் பார்க்கிறோம், அவன் ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்தில் நடக்கிறான், ஒரு மழை நாள் நிச்சயமாக அவனுடைய வெளிச்சத்தை அணைத்துவிடும். இங்கே ஏதாவது ஒரு சின்ன காரியம் நடந்தால், ஒரு சிறு விபத்து, ஏதோ ஒன்று நடந்தால், "சரி, ஒருவேளை ஆரம்பத்திலேயே நான் தவறாக இருந்திருக்கலாம். நான் சொல்கிறேன்; கிறிஸ்தவம் சரியானது என்று நான் நினைத்தேன்," என்பான். பின்பு அவன் சில நாட்கள் அப்படியே சென்று, ஒருவேளை பின்வாங்கிப் போய் வெளியே சென்றுவிடுவான். நேராக அவன் அந்த வழியே கடந்து போகும்போது, அவன் இருதயத்தில் ஏதோ ஒன்று கிளர்ந்தெழும், "அந்த மன்னாவில் இன்னொரு வாய் எனக்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே." இதோ அவன் மறுபடியும் உள்ளே போவான். "சரி, தேவனிடம் செய்த என் பொருத்தனைகளைப் புதுப்பித்துக்கொள்வேன்; நான் மறுபடியும் சபைக்கு வருவேன்." இது இப்படித்தான் நடக்கிறது. அவன் ஏறுவதும் இறங்குவதுமாக, உள்ளே வருவதும் வெளியே போவதுமாக, ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறான் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஏன்? அவன் நடந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தின் காரணமாகத்தான். மழை நாட்கள் வரும்போது அது அவனைத் தடுத்து நிறுத்துகிறது. அவ்வளவுதான். 63 அடுத்து இன்னொரு மனிதன், அவன் பலிபீடத்தின் மேல் வாழ்கிறான். அவன் இரவும் பகலும் ஜெபித்துக்கொண்டே இருக்கிறான், ஆனால் அவன் எங்கும் போய்ச் சேருவதில்லை. நீங்கள் அவர்களைப் பலிபீடத்தின் மேல் காணமுடியும். அவனிடமும் வெளிச்சம் இருக்கிறது. இப்போது, அவன் கூடாரத்திற்கு உள்ளே இருக்கிறான், ஆனாலும் பலிபீடத்தின் மேல் இருக்கிறான். பலிபீடத்தின் மேல் அந்த ஏழு விளக்குகள், ஏழு குத்துவிளக்குகள் இருந்தன. அவை வெளிச்சத்தைக் கொடுக்கின்றன. ஆனால் அநேக நேரங்களில் நாம் இதைப் பார்க்கிறோம், உங்களுக்கே அது தெரியும், உங்கள் விளக்கு புகைகிறது. அது உண்மைதான். அவை மிக மங்கலாக எரியும்; மெழுகுவர்த்தியின் எண்ணெய் கிட்டத்தட்ட தீர்ந்துபோகும், அந்த அனுபவங்கள் உங்களுக்கு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அது-நீங்கள் அப்படிச் செய்வதில்லையா? நிச்சயமாக. இரண்டாவது இடத்திலும் நீங்கள் அதைத்தான் செய்தீர்கள். 64 ஆனால் திரைச்சீலைக்குப் பின்னால் உள்ளே பிரவேசித்த மனிதன், சூரிய வெளிச்சத்தையோ, நட்சத்திர வெளிச்சத்தையோ, நிலவின் வெளிச்சத்தையோ, அல்லது அந்த ஏழு பொன் குத்துவிளக்குகளையோ சார்ந்து இருக்கவில்லை, அவன் பலிபீடத்தண்டை சென்று, கேருபீன்களின் இணைக்கப்பட்ட செட்டைகளுக்குக் கீழே சென்றான்; கர்த்தருடைய ஷெக்கினா மகிமை அங்கே இருந்தது, ஒரு மென்மையான வெளிச்சம், அங்கே அவன் வாழ்ந்தான். அது இரவும் பகலும் எந்நேரமும் அங்கே இருந்தது. அவன் ஜீவனுள்ள தேவனுடைய வெளிச்சத்தில் நடந்தான். ஆமென். மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், மழை பெய்துகொண்டிருந்தாலும், இடி முழங்கிக் கொண்டிருந்தாலும், ஒரு ராணுவம் வந்துகொண்டிருந்தாலும், அது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை, அவன் பாதுகாக்கப்பட்டிருந்தான், அவன் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்துகொண்டு ஷெக்கினா மகிமையில் இருந்தான். அல்லேலூயா. நான் ஒரு உணர்ச்சிவசப்படும் நபர் (holy-roller) என்று நீங்கள் நினைக்கலாம், ஒருவேளை நான் அப்படி இருக்கலாம். 65 சகோதரனே, நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன், ஷெக்கினா மகிமையில் வாழ்வதற்கு என்னை உணர்ச்சிவசப்படும் நபர் என்று அழைக்க வேண்டியிருந்தால், என்னை ஷெக்கினா மகிமையில் தேவனோடு இருக்க விடுங்கள், நீங்கள் அதை என்ன வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். ஆமென். ஒரு பாப்டிஸ்டுக்கு இது மிகவும் கடுமையானது, இல்லையா சகோதரரே? ஆனால், இதுதான் உண்மையான பிரசங்கம். இது உண்மையான... ஆனால் இதுதான் சத்தியம் என்று எனக்குத் தெரியும். ஆமென். பிரசங்கம் மிகவும் நன்றாக இல்லை என்றாலும், சத்தியம் அதேதான். ஆமென். உள்ளே வாருங்கள்; உலகம் எதை வேண்டுமானாலும் கூச்சலிட்டுப் பேசிக் கொள்ளட்டும். பிரசங்கியார் தோற்றுப் போகட்டும், மற்ற எல்லாமே தோற்றுப்போகட்டும், அது உங்களைச் சிறிதும் தடுத்து நிறுத்தக்கூடாது, அங்கேயே தங்கியிருங்கள். நீங்கள் உங்களுக்குப் பசிக்கும்போது சாப்பிடுவதற்கு ஏதுவாக அந்த மன்னா பானையண்டையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். இது நடக்குமா அல்லது அது நடக்குமா என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் ஷெக்கினா மகிமையில் வாழ்ந்து கொண்டிருக் கிறீர்கள், அந்த அழகான உண்மையான அம்பர் (amber) வெளிச்சம் இங்குள்ள கேருபீன்களின் இணைக்கப்பட்ட செட்டைகளுக்குக் கீழே தங்கியிருந்தது. அவன் அந்த வெளிச்சத்தில் நடந்தான்; முழு இடமும் வெளிச்சமாக இருந்தது. அங்கு எந்நேரமும் வெளிச்சமாக இருந்தது. 66 தேவனோடு மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாழும் ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ, கிறிஸ்துவின் கிருபையிலும் வல்லமையிலும் உயிர்த்தெழுதலிலும் இரவும் பகலும், எந்நேரமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆமென். நீங்கள் அங்கே வாழ விரும்பவில்லையா? அதுதான் இடம்; அதுதான் அந்த இடம். வெளி உலகத்தின் சத்தம் அங்கு உங்களுக்குக் கேட்கவே கேட்காது. ஓ, திரைச்சீலைகள் சுற்றி விடப்பட்டுவிட்டன. யாராவது வந்து, "உங்களுக்குத் தெரியுமா, திருமதி ஜோன்ஸ் இன்னின்ன காரியங்களைச் செய்தார்கள்," என்று சொல்வார்கள். நீங்கள் அதைக் கேட்கவே மாட்டீர்கள். "உங்களுக்குத் தெரியுமா, போதகர் இப்படிச் செய்தார்..." "சரி, நான் அதைக் கேட்கவே இல்லை. ஓ, என் தேவனே. போதகர் என்ன செய்தார் என்பது, அவரைப் பொறுத்தது. திருமதி ஜோன்ஸ் என்ன செய்தார் என்பது, அவரைப் பொறுத்தது. ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பது என்னையும் கிறிஸ்துவையும் பொறுத்தது. அல்லேலூயா. நான் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட பிரசன்னத்தில் இங்கே வாழ்கிறேன்." வாருங்கள், கிழிந்த திரையைத் தாண்டி, அவருடைய நாமத்திற்கு அல்லேலூயா; நான் பலிபீடத்தின்மேல் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறேன், அவருடைய நாமத்திற்கு அல்லேலூயா. அந்தப் பழைய பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள்: "ராஜாவின் பிரசன்னத்தில் நான் வாழ்கிறேன்." 67 ஓ, என் தேவனே, உள்ளே வாருங்கள். ராஜாவின் பிரசன்னத்திற்குள் வாருங்கள்; இரவும் பகலும் அங்கே வாழுங்கள். நீங்கள் அலைந்து திரிவதையும், அலைக்கழிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. நீங்கள் சபைக்கு வந்து மன்னாவைச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் பெற்றுக்கொள்வதில் திருப்தியடைந்து விடுகிறீர்கள்... ஓ, எனக்கு அது இரவும் பகலும் வேண்டும். உங்களுக்குத் தெரியும், எனக்கு அது மிக விரைவாகத் தேவைப்படும் ஒரு நேரம் வரலாம், அதனால் நான்-நான் அதற்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறேன். ஆமென். நீங்கள் விரும்பினால், அதைத்தான் நீங்கள் செய்ய முடியும்; கேட்பதினால் அது உங்களுடையதாகிறது. "குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன்." அது சரியா? "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, தேவன் சித்தமாயிருக்கிறார்." நீங்கள் முழுமையான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 68 அந்தச் சீஷர்கள், அவர் ஆசீர்வாதத்தைக் கொடுத்து, "இப்போது புறப்பட்டுப் போய், வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்," என்று சொல்லிப் பத்து நாட்கள் கூட ஆகவில்லை, அவர்கள் இந்தப் புதிய மகிமையுடன் வெளியே சென்றார்கள், அவர்கள் மிகச் சிறந்த நேரத்தைக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு சிறிய தோல்வியைச் சந்தித்தார்கள்: அங்கே வலிப்பு நோயுள்ள ஒரு சிறுவன் இருந்தான், அவனை அவர்களால் குணமாக்க முடியவில்லை. ஆகவே அந்த மனிதன் இயேசுவினிடத்தில் வந்து, "ஆண்டவரே, உம்முடைய சீஷர்களிடத்தில் இவனைக் கொண்டுவந்தேன்," என்றான். அப்படிச் செய்வதற்காக அவர்களை அனுப்புவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அவர் அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்திருந்தார்; இங்கே அவர்கள் தோற்றுப் போனார்கள். அவர், "ஓ, விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்," என்றார். அவர் அந்தப் பையனிடமிருந்து அசுத்த ஆவியைத் துரத்தினார். சீஷர்கள் வந்து, "நாங்கள் ஏன் அதைத் துரத்தக்கூடாமற்போயிற்று?" என்று கேட்டார்கள். "உங்கள் அவிசுவாசத்தினாலேதான்" என்று அவர் சொன்னார். 69 ஒரு நாள் இரவு கடலில், அந்தச் சிறிய படகு அலைக்கழிக்கப்பட்டபோது, எல்லா நம்பிக்கைகளும் போய்விட்டன, தாங்கள் மடிந்துபோவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் சென்று அவரை எழுப்பி, "நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?" என்று கேட்டார்கள். அவர், "ஓ, அற்பவிசுவாசிகளே," என்று சொன்னார். படகின் ஓரத்தின் மேல் தம் பாதத்தை வைத்து, "இரையாதே, அமைதலாயிரு," என்றார். அப்போது சீஷர்கள், "இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே," என்றார்கள். 70 அதே ஆசீர்வாதம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவனுள்ள தேவனுடைய இன்றைய சபைக்கு என்ன ஆயிற்று? இன்று நமக்கு என்ன ஆயிற்று? ஏனென்றால், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வந்து அங்கே தங்கியிருக்கவும், உலகத்தின் காரியங்களிலிருந்து நம்மை மறைத்துக்கொள்ளவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழவும் நாம் ஒன்றாகக் கூடிவர முடியவில்லை. ஆமென். சுவிசேஷத்தின் மகிமையான வெளிச்சத்திற்குள் வருவது என்றால் இதுதான். அப்படிச் செய்யும்போது, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்கிறீர்கள். இங்குள்ள எத்தனை பேர், "சகோதரர் பிரன்ஹாம், நான் அந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்," என்று சொல்வீர்கள், உங்கள் கைகளைப் பார்ப்போமா? உங்கள்... "நான் அந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 71 [ஒலிநாடாவில் வெற்றுப் பகுதி] இங்கே யாராவது ஒரு பாவி இருந்து, "நான் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே இல்லை, சகோதரர் பிரன்ஹாம், இன்றிரவு நான் அந்த மன்னாவை ருசி பார்க்கவாவது விரும்புகிறேன்," என்று சொல்வீர்களா. உங்கள் கைகளை நான் பார்க்கட்டும். "நான் மன்னாவை ருசி பார்க்க விரும்புகிறேன்," என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. வேறு யாராவது, "நான் மன்னாவை ருசி பார்க்க விரும்புகிறேன். நான் இன்னும் இரட்சிக்கப்படவே இல்லை. ஆனால் நீங்கள் எதைக்குறித்துப் பேசுகிறீர்களோ, அந்த மாதிரியான வாழ்க்கையை நான் வாழ விரும்புகிறேன். ஓ, நான் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறேன். எனக்கு அநேக கவலைகளும் பாரங்களும் இருக்கின்றன. நான்-நான் சமாளிக்கவே முடியாது போலத் தோன்றுகிறது," என்று சொல்லுங்கள். தேவன் அதை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். "விருப்பமுள்ளவன் ஜீவ தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்." 72 நான் ஏன் கேட்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஏன் உங்கள் கையை உயர்த்தினீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? வேறு யாராவது தங்கள் கைகளை உயர்த்த விரும்புகிறீர்களா? நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவன் உங்களோடு பேசிக்கொண்டிருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். அவர் ஏன் உங்களோடு பேசுகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்வேன். நான் சொல்ல விரும்பும் ஒரு குறிப்பு இருக்கிறது. இன்னொரு பாவி உங்கள் கையை உயர்த்தி, "சகோதரர் பிரன்ஹாம், நான் நிச்சயமாக அங்கே இருக்க விரும்புகிறேன். நான் அந்த மன்னாவைச் சாப்பிடவும், கர்த்தருடைய தயவு என்ன என்பதைப் பார்க்கவும் விரும்புகிறேன். ஓ, நான் ஒரு சபையைச் சேர்ந்தவன் என்பது எனக்குத் தெரியும். நான் அங்கே ரொம்ப காலமாகப் போகிறேன். ஆனால் இரட்சிக்கப் படுவதைப் பொறுத்தவரை, நான் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. நான்... நான்-நான் என்னை ஏமாற்றிக் கொள்ளவில்லை; நான் என் மனசாட்சியோடு வாழ வேண்டும். எனக்கு ஒரு சிறிய அறிக்கை இருக்கிறது: ஓ, இயேசு தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன் என்று சொன்னேன், ஆனால் பிசாசுகளும் அதைத்தான் சொல்கின்றன என்பது எனக்குத் தெரியும்," என்று சொல்லுங்கள். பிசாசுகள் இரக்கத்துக்காகக் கெஞ்சுகின்றன, சமாதானத்துக்காகக் கெஞ்சுகின்றன, தண்டிக்கப் படாமல் இருக்கக் கெஞ்சுகின்றன, அவரை அங்கீகரிக்கின்றன, அவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று கூட்டத்தின் முன்பாக அறிக்கை செய்கின்றன. அது உண்மைதான். அது உங்களை இரட்சிக்காது, இல்லவே இல்லை. இயேசுவின் இரத்தம் உங்கள் இருதயத்தில் தெளிக்கப்படுவதே உங்களை இரட்சிக்கிறது. உண்மையாகவே அதுதான். 73 "அது நான்தான், சகோதரர் பிரன்ஹாம், எனக்கு அந்த வாழ்க்கை வேண்டும்," என்று சொல்வதற்கு இன்னொரு கை உயருமா. அந்தச் சகோதரி தனது கையை உயர்த்தியதற்கு ஒரே காரணம், தேவன் அவரோடு இடைபட்டுக் கொண்டிருந்ததுதான். அது உண்மைதான். அது... "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்." அது சரியா? உங்களால் அதைச் செய்ய முடியாது. இந்த மேடையிலிருந்து இதைச் சொல்வதற்கு நாங்கள் வருந்துகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா, ஆனால் அதுதான் பைபிள் சத்தியம். பரிசுத்த ஆவியானவர் என்ன செய்தாலும், கர்த்தராகிய இயேசுவை ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஆண்களும் பெண்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதற்காகவே பிறந்தார்கள், இல்லை-தேவனுடைய சித்தத்தினால் அல்ல, ஆனால் அவருடைய முன்னறிவு அதை முன்கூட்டியே அறிந்திருந்தது. அது உண்மைதான். பைபிள் அப்படிச் சொல்கிறது. அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். 74 மேலும், உங்களுடைய இருதயம் தேவனை விட்டு எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டது என்றால், சரியானது எதுவோ அதைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் கூட உங்களுக்கு இல்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்துப் பாருங்கள். அப்படியானால் நீங்கள் ஒரு மோசமான நிலையில் இருக்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் அவருடைய ஆவியானவரை அநேக முறை துக்கப் படுத்தலாம், அவர் விலகிப் போய்விடுவார், பின்பு உங்களுக்கு எதன்மீதும் எந்த விருப்பமும் இருக்காது. தேவன் உங்களோடு பேசிக்கொண்டே இருக்கிறார், நீங்கள், "சரி, நான் உண்மையாகவே அப்படிச் செய்ய வேண்டும். அடுத்த எழுப்புதல் கூட்டத்தில் நான் என்னைச் சரிசெய்து கொள்வேன்; நான் மரிப்பதற்கு முன்பு அதைச் சரிசெய்து விடுவேன். நான்-நான் மரிப்பதற்கு முன்பு உண்மையாகவே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட விரும்புகிறேன். நான்-நான் தேவனோடு மறைக்கப்பட்டு, இனிமையான, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அவர் என் இருதயத்தின் கதவைத் தட்டும்போது, என் கைகளை விரித்து, 'ஆம், கர்த்தராகிய இயேசுவே,' என்று சொல்வதற்கு நான் ஆயத்தமாக இருக்க விரும்புகிறேன்," என்று சொல்வீர்கள். சரி, அதை ஏன் நீங்கள் இப்போதே செய்யக் கூடாது? அந்த நேரத்தில் உங்களால் அதைச் செய்ய முடியாமல் போகலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா. எனக்கு நாற்பத்தாறு வயதாகிறது, நான் பார்த்திருக்கிறேன்... நான் இருபத்தி மூன்று ஆண்டுகளாக ஊழியத்தில் இருக்கிறேன், நான் சில பயங்கரமான காட்சிகளைப் பார்த்திருக்கிறேன், மேலும் பலமுறை உலகெங்கிலும், மக்கள் எப்படிப்பட்ட நிலையிலெல்லாம் மரிக்கிறார்கள் என்பதைக் கவனித்துப் பார்த்திருக்கிறேன். உண்மையான, மெய்யான கிறிஸ்தவர்கள் என்று தங்களை நினைத்துக்கொண்டவர்களை நான் கவனித்திருக்கிறேன், ஆனால் அவர்கள் மரிப்பதற்கான நேரம் வரும்போது... ஓ, என் தேவனே, அந்த கேமரா திரும்பியது, தாங்கள் ஒரு தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு, அதின் பெலனை மறுதலித்து, தேவனை விட்டு விலகிச் சென்றிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அவர்கள் அந்த வாழ்க்கையைச் சற்றும் வாழவே இல்லை. அவர்கள் அலறுகிறார்கள், கூச்சலிடுகிறார்கள். ஊசி மருந்துகளால்கூட (hypos) அதை நிறுத்த முடியாது. அது உண்மைதான். 75 எனவே உறுதியாக இருங்கள், நண்பர்களே; இதோடு விளையாடாதீர்கள்; இது சுவிசேஷம். பாருங்கள்? "சரி, நான் சபையில் சேருவேன் என்று நினைக்கிறேன்," என்று மட்டும் சொல்லாதீர்கள். பரலோகத்தில் ஒருபோதும் நுழைய முடியாத ஆயிரக்கணக்கான மக்கள் சபைகளில் சேருகிறார்கள். நியாயத்தீர்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்கள் குறித்து நான் சில காலத்திற்கு முன்பு இங்கே பிரசங்கித்தேன். கள்ளச்சாராயம் விற்பவனும், சூதாடுபவனும், மற்றும்-மற்றும் வேசியும், மற்றவர்களும், அவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்; தங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியும் என்று நான் சொன்னேன். ஆனால், தான் சரியாய் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, ஆனால் உண்மையில் சரியில்லாத அந்த நபருக்குத்தான் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஜீவபுஸ்தகத்தில் உங்கள் பெயர் இல்லை என்பதை நீங்கள் பார்க்கும்போதுதான்; நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு, ஆனால் நீங்கள் அப்படி இல்லாதிருக்கும்போதுதான் அது கடினமாக இருக்கப்போகிறது. "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு." நீங்கள் சரியாய் இருக்கிறீர்கள் என்று அறிவாற்றலின்படி நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். சரியானது என்று நீங்கள் நினைத்த காரியங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள்; நீங்கள் நல்லவர்களாக இருந்திருக்கிறீர்கள்; நீங்கள் அன்பானவர்களாக இருந்திருக்கிறீர்கள். நாகமானும் அதே போலத்தான் இருந்தான். வேதத்தில் உள்ள இன்னும் அநேகரை நாம் இப்போது குறிப்பிடலாம். அது... நான் சொல்ல வருவது அதுவல்ல நண்பர்களே, இன்றைய சபை: அங்கே வெளியே-வெளியே நீதிமானாக்கப்படுதலில் உழன்றுகொண்டும், இங்கே பலிபீடத்தின் மேல் படுத்துக்கொண்டும் இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் இங்கே உள்ளே அர்ப்பணிக்கப் பட்டிருக்க வேண்டும். அற்புதங்களுக்கான காலம் நெருங்கியிருக்கிறது. குணமாக்குதல் களுக்கான காலம், பெரிய காரியங்களுக்கான காலம் நெருங்கியிருக்கிறது. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ள சபை எங்கே இருக்கிறது? நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நாம்-நாம் இதோடு விளையாடுகிறோம். நாம் அதோடு விளையாடுகிறோம். அதை வைத்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக விளையாடுகிறோம், அதற்குள் முழுமையாகச் செல்வதே இல்லை. 76 ஓ சகோதரனே, உண்மையான ஆதிக்கம் செலுத்தும் விசுவாசம் நேராக உள்ளே நடந்து சென்று அதனுடைய இடத்தை எடுத்துக்கொள்கிறது. அது உண்மைதான். உங்கள் இருதயம் கர்த்தருக்கு முன்பாக மென்மையாக இல்லாவிட்டால், பவுல் சொன்னது போல, "நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்படுகிறேன். நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் வெளிப்படுவதை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்," என்று என்ன வந்தாலும் போனாலும், இரவும் பகலும் திருப்தியளிக்கும் ஒன்று உங்கள் இருதயத்தில் இல்லாவிட்டால். "அவர் வெளிப்படுவதை விரும்புவது" என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உலகம் உங்களுக்கு மிகவும் மரித்துப்போய், வெறுமையாகிவிட்டதால், இங்கே உங்களால் எந்தச் சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாது, கிறிஸ்துவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப் படுத்துவதைத் தவிர வேறு எதிலும் உங்களால் சந்தோஷத்தைப் பெற முடியாது. பரிசுத்த ஆவியினால் முத்திரையிடுவதற்காக அனுப்பப்பட்ட அந்த முத்திரையிடும் தூதன், "நகரத்தின் மத்தியில் செய்யப்படும் அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களை மட்டுமே முத்திரையிட்டார்" என்பதை நீங்கள் அறிவீர்களா, எசேக்கியேல் 9. நீங்கள் அதை எப்போதாவது படித்திருக் கிறீர்களா? சத்தமிட்டு நடனமாடியவர்களை அல்ல, நகரத்தில் செய்யப்படும் அருவருப்புகளுக்காகப் பெருமூச்சுவிட்டு அழுதவர்களை: அவர்கள் மட்டுமே முத்திரையிடப்பட்டார்கள். 77 நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்: அந்தத் தூதன் கடந்து சென்று, தொலைந்துபோன ஆத்துமாக்களுக்காக இரவும் பகலும் தங்களின் இருதயத்தில் பாரம் கொண்டவர்களாக, இங்கே மினியாபோலிஸில் செய்யப்படும் அருவருப்புகளுக்காகப் பெருமூச்சு விட்டு அழுகிற அளவுக்குத் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் குடும்பத்தில் உள்ள எத்தனை பேரை, உங்கள் சபையில் உள்ள எத்தனை உறுப்பினர்களைப் பார்த்தார் என்றால், இன்றிரவு அவர் எத்தனை பேரை முத்திரையிடுவார்? ஒரு நிமிடம் அதைப்பற்றி யோசித்துப் பாருங்கள். பாருங்கள்? இது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு பெரிய காரியம். மேலும் நினைவில்கொள்ளுங்கள், அது கர்த்தருடைய வார்த்தை. நான் உலகத்தின் பல இடங்களுக்குச் சென்று மக்களைக் கவனித்தபோது அது என் இருதயத்தில் இருக்கிறது, அந்த அபிஷேகம் பகுத்தறிதலுடன் வரும்போது, அது இப்போது என்மீது வெளிப்படுகிறது. நான் ஒரு தீவிரவாதி அல்ல. அது உண்மைதான். இல்லை, தேவன் விலக்குவாராக. அந்த மாதிரியான ஒரு சிறிய வரத்தை நான் ஒருபோதும் எடுத்துக்கொண்டு அதை எந்த வகையிலும் பயன்படுத்த முயற்சிக்க மாட்டேன், தேவனுடைய மகிமைக்காக மட்டுமே பயன்படுத்துவேன், நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன், இன்றிரவு தேவனுடைய பிரசன்னத்தில் நான் எங்கே நிற்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன், மக்கள் அலைக் கழிக்கப்பட்டும் தாங்கள் சரியாய் இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டும் திரிந்ததை நான் நிச்சயமாகப் பார்த்திருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். சபையானது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பதையும், மற்றொரு நிலையில், ஒரு படித்த சபை, "சரி, எங்களிடம் வார்த்தை இருக்கிறது," என்று நினைப்பதையும் நான் பார்க்கிறேன். "எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது." நீங்கள் எவ்வளவு நேராகவும் வைராக்கியமாகவும் இருந்தாலும், தேவனுக்கு முன்பாக உங்கள் ஆத்துமாவை இளைப்பாறப் பண்ணும் அந்தப் பிரசன்னத்தில் நீங்கள் ஒருபோதும் இருந்ததில்லை என்றால், உண்மையான ஜெயம் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. அது உண்மைதான். 78 சகோதரனே, சகோதரியே, அது உங்களை அப்படிப் பிடித்துக்கொள்ள அனுமதிக்காதீர்கள். அது உங்களை அப்படிப் பிடித்துக்கொள்ள அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் அப்படி நடந்தால், உங்களுக்குக் கிடைக்கப் போவது என்னவென்று உங்களுக்குத் தெரியும். ஆகவே இன்றிரவு நாம் ஒன்றாக இருக்கும்போது, நாம் அவருடைய பிரசன்னத்தில் இருக்கும்போது, நாம் இப்போது எழுந்து நின்று தேவனிடம் ஒரு ஜெபத்தை ஏறெடுப்போம். அங்கே தன் கையை உயர்த்திய அந்த ஒரு சகோதரி, அவள் ஒரு பாவியாக இருந்தாள், ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்பினாள், சகோதரியே, நீங்கள் அங்கே உள்ள மற்றவர்களுடன் எழுந்து நிற்பீர்களா, தேவன் உங்களுடைய ஒவ்வொரு பாவத்தையும் மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அப்படியே உங்கள் தலையைத் தாழ்த்தி, உங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேளுங்கள், அவர் உங்களை இன்றிரவே அவருடைய ராஜ்யத்திற்குள் எடுத்துக்கொள்வார், மன்னிப்பார்... இதைப்பாருங்கள், சகோதரியே, தேவன் முதலில் அழைக்காமல், ஒருவரும், ஒருவரும் தேவனிடத்தில் வர முடியாது. இயேசு சொன்னார், "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை; நான் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன். என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. (அது அறிவாற்றலைக் கொண்டிருப்பது அல்ல; அதை உங்கள் இருதயத்திலிருந்து விசுவாசிப்பது.)-அவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்." ஏனென்றால் தேவன் அதை உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். 79 இன்றிரவு தங்கள் வாழ்க்கையைத் தேவனுக்கு அர்ப்பணிக்க விரும்பும் மற்றவர்களாகிய நீங்கள், நாம் ஜெபிப்போம், நாம் ஒவ்வொருவரும், நான் சத்தமாக ஜெபிக்கும்போது, நீங்கள் அமைதியாக இந்த ஜெபத்தை ஜெபியுங்கள். நீங்கள் இந்த ஜெபத்தை ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஓ தேவனே, என்னுடைய... பியானோ வாசிப்பவர் வந்து பாடட்டும். "என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது (My Faith Looks Up To Thee)" என்ற பாடலின் இசையை எங்களுக்குக் கொடுப்பீர்களா, சகோதரியே? இந்தப் பாடல் எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் ஜெபிப்பதற்கு முன்பு முதலில் அதைப் பாடுவோம். என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது, கல்வாரி ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே; இப்போது, நான் ஜெபிக்கும்போது எனக்குச் செவிகொடும், என் குற்றமெல்லாவற்றையும் நீக்கிவிடும், இந்நாள் முதலாய் நான் முழுவதும் உம்முடையவனாக இருக்கட்டும். நீங்கள் என்னோடு சேர்ந்து பாடுவீர்களா? இப்போது அனைவரும் சேர்ந்து, நம் கைகளை உயர்த்திப் பாடுவோம். என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது, கல்வாரி ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே; இப்போது, நான் ஜெபிக்கும்போது எனக்குச் செவிகொடும், என் குற்றமெல்லாவற்றையும் நீக்கிவிடும், ஓ, இந்நாள் முதலாய் நான் முழுவதும் உம்முடையவனாக இருக்கட்டும்...?... 80 இப்போது, அவர் தொடர்ந்து அடுத்த சரணத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது, நீங்கள் எனக்காக ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் வலதுபுறமாக, உங்களுக்குப் பக்கத்தில் நிற்கும் நபரிடம் நேராகச் சென்று, அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "சகோதரனே, சகோதரியே, தேவன் என்னை இப்போது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்காக ஜெபியுங்கள், நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன்," என்று சொல்லுங்கள். உங்களுக்குப் பக்கத்தில் நிற்கும் உங்கள் அயலவரிடம் அதைச் சொல்லுங்கள், "சகோதரனே, சகோதரியே, தேவன் என்னை இப்போது நேராக ஷெக்கினா மகிமைக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று எனக்காக ஜெபியுங்கள்." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது அதை உண்மையாகவே உங்கள் இருதயத்திலிருந்து சொல்லுங்கள். "எனக்காக ஜெபியுங்கள்; இதோ என் கை, சகோதரனே, எனக்காக ஜெபியுங்கள். நான் ஷெக்கினா மகிமைக்குள் வர விரும்புகிறேன்." இன்னும் சில இரவுகளில் நாம் குணமாக்கும் கூட்டங்களை நடத்தப் போகிறோம், அப்படிச் செய்யும்போது, இந்த காரியங்களை நாம் விரும்புகிறோம்-நீங்கள் அனைவரும் மகிமையில் இருக்கும்போது, ஷெக்கினா மகிமையில் இருப்பீர்கள். இப்போது என்னை உள்ளே அழைத்துச் செல்லும்...?... 81 ஓ பரம பிதாவே, இன்று இரவு நாங்கள் ஒருவரையொருவர் கரம் பிடித்துக் கொள்கிறோம். ஆண்டவரே, எங்கள் இருதயத்தை எடுத்து, அதை புதிதாக்கும். கல்லான பகுதியை உடைத்துப்போடும், ஆண்டவரே, வெளியே உள்ள பிரகாரங்களில் இருந்து எங்களை தூக்கியெடுத்து, ஆண்டவரே, எங்களை உம்மோடு கொண்டுவாரும், எங்களை இன்னும் சற்றே உயரே தூக்கும்; ஆண்டவரே, எங்களை உம்முடைய சமுகத்திற்குள் கொண்டுவாரும், அங்கே ஷெக்கினா மகிமை எங்களைச் சுற்றிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கும், நாங்கள் அந்த வெளிச்சத்தில் நடப்போம். பரம பிதாவே, அதை அருளிச்செய்யும், இதுவே எங்கள் கெஞ்சல்; இதுவே ஒருவருக்காய் ஒருவர் செய்யும் எங்கள் ஜெபம், உம்முடைய ஆவியானவர் எங்கள் மேல் அசைவாடி இந்தக் காரியங்களை அருளிச்செய்ய வேண்டும், ஓ நித்திய தேவனே, ஜீவாதிபதியே, இயேசுவின் நாமத்தின் மூலமாக இதை அருளிச்செய்யும். 82 பிதாவே, இங்கே இருக்கும் ஒவ்வொருவரும், தங்களை வழிநடத்த, இப்போது கிறிஸ்துவை தங்கள் தனிப்பட்ட வழிநடத்துனராக ஏற்றுக்கொள்வார்களாக. அவர்கள் மன்னாவைப் புசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பிதாவே, அந்த அனுபவம் ஒருபோதும் குறைவுபடாத இடத்திற்கு அவர்களை நீர் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இப்போது இந்தக் கட்டிடத்தின் மேல் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த மகிமையானது, மரணம் நம்மை விடுவித்து, இந்த மகிமையான நிலைப்பாட்டில் நம்மை அவருடைய சமுகத்திற்குள் கொண்டுசெல்லும் வரை, ஒவ்வொரு இருதயத்திலும், உண்மையாகவே வாசம்பண்ணுவதாக. ஆண்டவரே, அதை அருளிச்செய்யும். தேவனுடைய மகிமைக்காக, உம்முடைய ஆவியானவர் இப்போது ஒவ்வொரு இருதயத்திலும் உண்மையாகவே தங்கியிருப் பாராக. அதை மிகவும் மெச்சுகிறேன். "நாம் வெளிச்சத்தில் நடப்போம்." நாம் வெளிச்சத்தில் நடப்போம், அழகான வெளிச்சம், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசிக்கும் இடத்திலிருந்து வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே, உலகத்தின் வெளிச்சம். இப்போது அனைவரும் ஒன்றாக, உங்கள் கைகளை உயர்த்தியபடி. நாம் வெளிச்சத்தில் நடப்போம், (எந்த வெளிச்சம்? ஷெக்கினா.) அழகான வெளிச்சம், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசிக்கும் இடத்திலிருந்து வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே, உலகத்தின் வெளிச்சம். நீங்கள் இப்போது அவருடைய சமுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று உங்களில் எத்தனை பேர் உங்கள் ஆத்துமாவில் உணருகிறீர்கள். "ஆமென்" என்று சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள், "ஆமென்." அப்படியானால், அதை மீண்டும் பாடுவோம். நாம் வெளிச்சத்தில் நடப்போம், ஒரு அழகான வெளிச்சம், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசிக்கும் இடத்திலிருந்து வருகிறது, இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும் பிரகாசிக்கிறது, இயேசுவே, உலகத்தின் வெளிச்சம். ஆமென். ஓ, எப்படி... கிறிஸ்துவுடன் மறைக்கப்பட்ட ஜீவியம் (56-0213) 2